நான் இன்னும் சாகாமல் தான் இருக்கிறேன்- நடிகை சமந்தா உருக்கம்
3 years ago
08 நவம்பர் 2022 11:01 AM | views : 191
நான் இன்னும் சாகாமல் தான் இருக்கிறேன், பல விஷயங்களை கடந்து இவ்வளவு தூரம் வந்தவள் நான் என யசோதா திரைப்பட புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா உருக்கமாக பேசினார்.
திரைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. அழகான தோற்றத்தாலும், சீரிய நடிப்பாலும் சினிமா ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர். சமீப காலமாகவே சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இல்லாமல் இருந்த இவர், தான் அரிய வகை தசை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள யசோதா திரைப்படம் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரொமோஷன் பணிகளுக்காக நேர்காணல் ஒன்றை சமந்தா அளித்துள்ளார்.
அதில் பேசிய நடிகை சமந்தா, மயோசிடிஸ் நோய் எனும் தசைத் தளர்வு நோயை எதிர்த்து ஒவ்வொரு நாளும் போராடி வருகிறேன்.இன்ஸ்டாகிராமில் நான் சொன்னபடி சில தினங்கள் நல்ல நாட்களாகவும், சில நாட்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிறது
என் உடல்நிலை உயிருக்கே ஆபத்தாக உள்ளது என செய்திகள் பரவி வருகிறது. இந்த கணம் வரையிலும் நான் சாகாமல் தான் இருக்கிறேன். அந்த தலைப்புச் செய்திகள் அவசியமானவை என நான் நினைக்கவில்லை. மிகவும் கஷ்டமான நிலையில் தான் இருக்கிறேன், ஆனாலும் எதிர்த்துப் போராடுவேன். பல விஷயங்களை கடந்து இவ்வளவு தூரம் வந்தவள் நான் என்று கூறினார்.