கதாநாயகியாக அவதாரம் எடுக்கிறார் பாடகி ராஜலட்சுமி!
நவம்பர் 10, 2022 | 12:02 pm | views : 1811
'சார்லி சாப்ளின் 2' படத்தில் இடம்பெற்ற 'என்ன மச்சான்', 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற 'சாமி என் சாமி' உட்பட பல பாடல்களை பாடியிருப்பவர் நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமி செந்தில்.
இவர் 'சைலன்ஸ்' என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார்.
Also read... கட்டணமின்றி ஆவணங்களை மீண்டும் பெற சிறப்பு முகாம்கள் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
தந்தை - மகள் பாசப் பின்னணியோடு பெண்களின் பாதுகாப்பு பற்றி விவாதிக்கும் கதையாக இந்தப் படம் உருவாகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி கணபதி பாலமுருகன் இயக்குகிறார். இவர் கவுண்டமணி நடித்த, 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' என்ற படத்தை இயக்கியவர். நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக இளஞ்செழியன் தனது நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார். ராதாரவி, விஜய் பாரத், மதுரை ரிஷி, குழந்தை நட்சத்திரம் அதிதி பாலமுருகன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
![]() |
![]() |
![]() |
![]() |
குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை - தமிழக அரசு அறிவிப்பு!
மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையில் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. இதில் இன்னும் சில பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. எனினும், பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது.
கட்டணமின்றி ஆவணங்களை மீண்டும் பெற சிறப்பு முகாம்கள் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த