1999 ல் ராமராஜன் நடிப்பில் வெளியான அண்ணன் என்கிற படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் 23 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது.
எண்பது மற்றும் தொண்ணூறுகளில் மக்கள் நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் ராமராஜன். கிராமிய மணம் சார்ந்த படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களின் மனதை தனது யதார்த்தமான நடிப்பால் கவர்ந்தவர்.
45 வருடங்களில் தான் நடித்த படங்கள் அனைத்திலுமே கதாநாயகனாக மட்டுமே நடித்துள்ள பெருமை கொண்ட ராமராஜன், தற்போது ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு சாமானியன் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நடிகர் ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர் இணை நாயகர்களாக நடிக்கின்றனர். தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன உள்ளிட்ட படங்களை இயக்கிய R. ராகேஷ் இந்த படத்தை இயக்கி வருகிறார். எட்செட்ரா என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் V.மதியழகன் இந்த படத்தைத் தயாரித்து வருகிறார்.
சாமானியன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜா தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.
ராமராஜன் நடித்த பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்து, அவரது வெற்றிக்கு துணைநின்று காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்துள்ளார் இளையராஜா. சாமானியன் படத்திற்காக ராஜாவை நேரில் சந்தித்து பேசினார் ராமராஜன். அப்போது ராஜாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நெகிழ்ந்தபடி மனம் விட்டுப் பேசிய ராமராஜன், நான் பல வருடங்கள் கழித்து நடிப்பிற்குத் திரும்பி உள்ளேன்.
இந்த படத்திற்கு நீங்கள் தான் இசையமைக்க வேண்டும் என உரிமையுடன் கேட்க, இளையராஜாவும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இப்படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார்.
இதற்கு முன்னதாக 1999ல் ராமராஜன் நடிப்பில் வெளியான அண்ணன் என்கிற படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 23 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது.
எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
குட் பேட் அக்லி படக்குழுவிடன் இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் மிகுந்த திருப்தியளித்துள்ளதால் முதல் மூன்று நாள்களில் ரூ. 100 கோடி வசூலைக் கடந்துள்ளது..இந்த நிலையில்,
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!