தூங்கிக்கொண்டிருந்த கணவனின் பிறப்புறுப்பை அறுத்த மனைவி!

நவம்பர் 18, 2022 | 01:10 am | views : 1746
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள பாலிசார் கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினரிடையே சண்டை நடந்துள்ளது. இந்த சண்டைக்குப் பிறகு கணவன் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது அந்தரங்க உறுப்புகளை மனைவி துண்டித்துள்ளார்.
இரவில் தொலைபேசியில் பேச வேண்டாம் என கணவன் மனைவியிடம் கூறியதால் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கணவர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், இரவில் மனைவி போனில் பேசிக் கொண்டிருந்ததார். அதற்கு எதிரிப்பு தெரிவித்ததால் எனது பிறப்புறுப்பை வெட்டியுள்ளார் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அவருக்கு இடையூறாக இருந்ததால், அழைப்பை துண்டிக்கும்படி கூறியதால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், தூங்கிக் கொண்டிருந்த கணவரின் அந்தரங்க உறுப்புகளை வெட்டியுள்ளார். வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அவரை, குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இருவரும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். விசாரணையில் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்தது தெரியவந்தது. மேலும் அவர் மீது கடந்த காலங்களில் வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்ததும் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து பார்மர் உதவி காவல் கண்காணிப்பாளர் நர்பத்சிங் ஜெய்தாவத் கூறுகையில், "இந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் கணவரின் மருத்துவ அறிக்கைக்காக காத்திருக்கிறோம்" என்றார். இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருவதாகவும், ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Also read... முத்துராமலிங்கத் தேவர், அண்ணாதுரை மோதல்.. நடந்தது என்ன?
![]() |
![]() |
![]() |
![]() |
ஊழல் குற்றச்சாட்டில் சந்திரபாபு நாயுடு கைது..!
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும்,
தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது;
2019- ல் சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ.317 கோடி ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், நந்தியாலா போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்
முத்துராமலிங்கத் தேவர், அண்ணாதுரை மோதல்.. நடந்தது என்ன?
தேவர், அண்ணாதுரை... நடந்தது என்ன?
மதுரையில் கடவுளை பற்றி அண்ணாதுரை பேசியதும், அதற்கு தேவரின் எச்சரிக்கையும் தமிழக அரசியலில் மிக முக்கியமான வரலாறு.. இந்த செய்தியை பற்றி பல்வேறு கருத்துக்கள் பகிரப்படுகின்றன.
இந்த வரலாறை பற்றி பேசிய அண்ணாமலை அவர்களுக்கு பாராட்டுக்கள்..
நான் பேட்டி எடுத்த பல
பெரியார் மணியம்மை திருமணம் பற்றி அண்ணா எழுதிய கட்டுரை!
அண்ணா எழுதிய கட்டுரை : பெரியார் மணியம்மை திருமணம்
9.7.1949ல் நடந்த பெரியார் - மணியம்மை திருமணத்தை கண்டித்து “ திராவிட நாடு ” பத்திரிகையில் 03.07.1949 அண்ணா எழுதிய கட்டுரை :
சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 ம் ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு அவர்
திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் கட்டிய ஆண்டிகள் கதை!
ஆண்டிகள் கூடிமடம் கட்டிய கதை என்று கிண்டலாக கூறுவார்கள் ஆனால் !..
உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்.
பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு