POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

சுவாமிதோப்பில் உதயநிதி ஸ்டாலின் சாமி தரிசனம்!

3 years ago 21 நவம்பர் 2022 04:42 PM | views : 218
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதியில் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சாமி தரிசனம் செய்துள்ளார்.





கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் இன்று உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க, இன்று மதியம்

கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வந்தடைந்தார். அவருக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.







பின்னர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில், உதயநிதி ஸ்டாலின் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். சாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருக்கோயில் சார்பாக அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவாமிதோப்பு பதியின் பள்ளி அறைக்கு சென்ற உதயநிதி, அய்யா வைகுண்டரை தரிசனம் செய்தார். ஆனால் பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்டருக்கு அடையாளமான தலைப்பாகையும் நாமமும் கோவில் நிர்வாகம் சார்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படவில்லை.



தரிசனம் செய்த பின்னர், பொதுமக்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், மக்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து உலக மீனவர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI ADMK AMMK எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS கனமழை டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU AIADMK PMK பாமக தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற தேர்தல் முக ஸ்டாலின் கைது காங்கிரஸ் திருமாவளவன் தமிழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கோவை சட்டசபை தேர்தல் COIMBATORE இந்திய அணி CONGRESS EDAPPADI PALANISWAMI வடகிழக்கு பருவமழை கொலை பிரதமர் மோடி சீமான் THIRUMAVALAVAN வன்னியர் INDIAN CRICKET TEAM KEERTHY SURESH தேவர் OPS அமமுக NELLAI SURIYA ASSEMBLY ELECTIONS தென்காசி மதுரை நெல்லை தீபாவளி PARLIAMENT ELECTION ஓபிஎஸ் தமிழ்நாடு TAMIL ACTRESS AJITH திருப்பரங்குன்றம் தமிழக சட்டசபை தேர்தல் NORTHEAST MONSOON PRIME MINISTER MODI விடுமுறை பாலியல் தொல்லை MADURAI அஜித் தூத்துக்குடி சூர்யா மோடி கீர்த்தி சுரேஷ் கள்ளக்காதல் அன்புமணி ELECTION COMMISSION BIGG BOSS TAMIL TAMILAGA VETTRI KAZHAGAM CSK