POLLING 📊 TN ELECTION 2026

 

சர்வதேச கூடைப்பந்து போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தென்காசி வீராங்கனை

3 years ago 02 டிசம்பர் 2022 10:38 AM | views : 152
தென்காசி மாவட்டம் இலஞ்சியை சேர்த்தவர் கனகலட்சுமி. மாற்றுத்திறனாளியான இவருக்கு கூடைபந்து மீது தீராத காதல் வந்தது. அதன் பின்னர் தன்னுடைய ஊனத்தை பொருட்படுத்தாது சக்கர நாற்காலியில் இருந்துக்கொண்டே கூடைபந்து பயிற்சி எடுத்தார்.

கடின உழைப்பும், விடா முயற்சியும், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவருக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது. சக்கர நாற்காலி கூடைபந்து போட்டிகளில் சிறந்த வீராங்கனையாக மாநில அளவில் வளம் வர தொடங்கினார்.

மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளின் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று குவித்தார். சென்னை, டெல்லி, ஐதரபாத், ஈரோடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேசிய போட்டிகளில் கலந்துக்கொண்டு பதக்கங்களை தவறாது வென்றார்.


கனகலட்சுமி இரண்டு தடவை சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இரண்டு முறை சர்வதேச முகாமில் (camp) பங்கேற்று உள்ளார். இந்த ஆண்டு நொய்டாவில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு நேபாளை வீழ்த்தி வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்திய அணிக்காக பங்கேற்ற ஒரே ஒரு பெண் கனகலட்சுமி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.


சர்வதேச போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் வீராங்கனை என்ற இவரது சாதனையை பாராட்டி தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கனகலட்சுமியை பாராட்டினார். சாதனைகள் தொடரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

திமுக DMK விஜய் VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK AMMK ADMK ANNAMALAI தவெக டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி TAMIL NADU MK STALIN TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் கனமழை ANBUMANI RAMADOSS உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் PMK AIADMK மு.க.ஸ்டாலின் பாமக அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் தமிழகம் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் கைது கோவை சட்டசபை தேர்தல் CONGRESS கொலை தமிழ்நாடு சீமான் INDIAN CRICKET TEAM COIMBATORE திருமாவளவன் இந்திய அணி பிரதமர் மோடி தீபாவளி EDAPPADI PALANISWAMI அமமுக KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை தென்காசி PARLIAMENT ELECTION AJITH TAMIL ACTRESS நெல்லை OPS NELLAI தேவர் TAMILAGA VETTRI KAZHAGAM ASSEMBLY ELECTIONS THIRUMAVALAVAN தமிழக சட்டசபை தேர்தல் திருப்பரங்குன்றம் தூத்துக்குடி மதுரை விடுமுறை ஓபிஎஸ் அஜித் கள்ளக்காதல் வன்னியர் SEEMAN ELECTION COMMISSION PRIME MINISTER MODI MADURAI கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை CSK NORTHEAST MONSOON