POLLING FLAMES

 

ஓபிஎஸ் அணியில் இருந்து விலகுவதாக கூறி கோவை செல்வராஜின் பரபரப்பு ஆடியோ!

3 years ago 03 டிசம்பர் 2022 11:30 PM | views : 268
அதிமுகவில் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் அதிகார மோதல் ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் ஒ.பன்னீர்செல்வத்தின் அதிதீவிர ஆதரவாளராக திகழ்ந்த கோவை செல்வராஜ் அவரது அணியில் இருந்து விலகியுள்ளார்.

அதிமுகவில் உட்கட்சி பூசல் கடந்த சில மாதங்களாக பூதாகரமாக வெடித்துள்ளது. இபிஎஸ் -ஓபிஎஸ் தரப்பு மாறி மாறி கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கோவை செல்வராஜ்,  உள்ளிட்டோர் தீவிர ஆதரவாளராக அறியப்படுகின்றனர்.

குறிப்பாக கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியில் இருந்து கொண்டு இபிஎஸ் அணியை கடும் வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில் ஓபிஎஸ் அணியில் இருந்தும் அதிமுகவில் இருந்தே விலகுவதாக கோவை செல்வராஜ் பேசும் ஆடியோ வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து ஆடியோவில் பேசியுள்ள கோவை செல்வராஜ், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை வெளியான பின் ஓபிஎஸ்- பதவிக்காக ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்பது தெரியவந்தது. ஜெயலலிதாவுக்கு அப்போல்லோவில் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார்.



ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து சென்று உயிரோடு கொண்டுவரவில்லை. சுயநலவாதிகளுடன் சேர்த்து பணியாற்ற எனது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. ஜெயலலிதாவின் உயிரைவிட பதவி முக்கியம் என செயல்பட்டுள்ளனர். இபிஎஸ்- ஓபிஎஸ் என இருவரின் தலைமையில் செயல்பட தமக்கு விரும்பவில்லை என்றும் ஜெயலலிதாவுக்காக இந்த இயக்கத்தில் பணியாற்றினேன், செயல்பட்டேன் என பேசினார்.

மேலும் சுயநலத்திற்காக சண்டை போடுவதால் அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை. கட்சியை அழிக்கும் செயலில் நான் ஈடுபடக்கூடாது என விலகுகிறேன் எனவும் அரசியலில் இருந்து தாம் விலகவில்லை என குறிப்பிட்டுள்ளார். திராவிட பாரம்பரியத்தில் வந்த நான் அதில் தான் இருப்பேன் என்றும் தற்போது நான் ஓபிஎஸ் அணியில் இருந்தும் அதிமுகவில் இருந்தும் விலகுவதாக அந்த ஆடியோவில் கோவை செல்வராஜ் பேசியுள்ளார். இந்த ஆடியோ வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI AMMK TVK ADMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் MK STALIN ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் TAMIL NADU இந்திய அணி PMK AIADMK UDHAYANIDHI STALIN காங்கிரஸ் ரஜினிகாந்த் பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் INDIAN CRICKET TEAM கனமழை கோவை பாமக CONGRESS கொலை திருமாவளவன் EDAPPADI PALANISWAMI COIMBATORE அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் தமிழ்நாடு வன்னியர் SURIYA கைது சீமான் KEERTHY SURESH நெல்லை NELLAI OPS அமமுக தேவர் பிரதமர் மோடி ஓபிஎஸ் AJITH தமிழக சட்டசபை தேர்தல் சூர்யா THIRUMAVALAVAN கொரோனா சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS BIGG BOSS TAMIL தென்காசி வடகிழக்கு பருவமழை தூத்துக்குடி நடிகை பாலியல் தொல்லை RAJINIKANTH விடுமுறை கள்ளக்காதல் CSK ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் அஜித் அன்புமணி கீர்த்தி சுரேஷ் TAMILAGA VETTRI KAZHAGAM PARLIAMENT ELECTION மதுரை