POLLING FLAMES

 

ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - தமிழக அரசு விளக்கம்

3 years ago 13 டிசம்பர் 2022 10:29 AM | views : 256
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு ஆண்டுதோறும் வேட்டி, சேலை, பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். அதனுடன் பொங்கல் வைக்க தேவைப்படும் தேவையான அரசி, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்களுடன் கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைமையிலான அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கியது.

அதேப்போன்று வரஉள்ள 2023 பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க உள்ள பொங்கல் தொகுப்பு குறித்து மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தஞ்சை சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்க கூடிய பொங்கல்  பரிசு தொகுப்பில் வழங்கப்படக் கூடிய பொருட்களை   தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் தமிழகத்தில்  2017 ஆம் ஆண்டு முதல் பொங்கல் பண்டிகை  முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு 2.20 கோடி குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான வேட்டி, சேலைகளை தமிழக நெசவாளர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என தமிழக அரசு பாராட்ட தகுந்த முடிவை எடுத்துள்ளது .

இவை தவிர அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட 20 வகையான விவசாய பொருட்களை பிற மாநிலங்களில் இருந்தே பெரும்பாலும் வாங்கப்பட்டுள்ளன. சில சமயங்களில், அந்த நிறுவனங்கள் தரமான பொருட்களை வழங்குவது கிடையாது.   இதற்கு மாற்றாக அவற்றை  தமிழக விவசாயிகளிடமிருந்தே வாங்கினால்  தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். இது தொடர்பாக நடவடிக்கை  கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படக் கூடிய, பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு   நீதிபதிகள் கிருஷ்ண குமார்,  விஜயகுமார்  அமர்வு, முன் விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், இது தமிழக அரசின் கொள்கை முடிவு.  தற்போது  முன் கூட்டியே  தெரிவிக்க இயலாது.  எனவே  மனுவை  தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர்  வாதிட்டார். இந்த தகவலை,  பதில் மனுவாக. தமிழக கூட்டுறவுத்துறை செயலர்  தாக்கல் செய்ய உத்தரவிட்டு  வழக்கு  விசாரணையை   ஒரு வாரம் ஒத்தி வைத்து  நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN TAMIL NADU ANBUMANI RAMADOSS PMK டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் AIADMK ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN முக ஸ்டாலின் கனமழை பாமக இந்திய அணி PARLIAMENT ELECTION தமிழகம் CONGRESS கோவை கொலை அன்புமணி ராமதாஸ் COIMBATORE திருமாவளவன் EDAPPADI PALANISWAMI AJITH அமமுக பிரதமர் மோடி INDIAN CRICKET TEAM சீமான் தமிழ்நாடு OPS கைது TAMILAGA VETTRI KAZHAGAM KEERTHY SURESH NELLAI கொரோனா ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் நெல்லை THIRUMAVALAVAN தீபாவளி SURIYA வன்னியர் தூத்துக்குடி விடுமுறை மதுரை ELECTION COMMISSION தேவர் CSK சூர்யா அஜித் கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH திருப்பரங்குன்றம் தென்காசி வடகிழக்கு பருவமழை