தென்காசி மாவட்டத்தில் உள்ள மர வியாபாரிகள் இங்கு மரங்கள் வெட்ட தடை உள்ளதால் இந்தோனேசியா, நைஜீரியா போன்ற வெளிநாடுகளில் இருந்து தேக்கு உள்ளிட்ட மரங்களை இறக்குமதி செய்து வருகின்றனர்.
இந்திரா காந்தி 1975 ல், வனத்தை பாதுகாக்க, சுற்றுச்சூழலை பேனிகாக்கும் வகையில் மரங்கள் வெட்ட தடை உள்ளிட்ட 20 அம்ச திட்டத்தின் நடைமுறை படுத்தினார். இதன் எதிரொலியாகமரங்கள் வெட்டுவது தடை செய்யப்பட்டது.
இருப்பினும் கேரளாவில் இருந்து கள்ளச்சந்தை மூலம் தமிழகத்திற்குமரங்கள் வந்து கொண்டு இருந்தது. தற்போது கேரளா அரசின் கெடுபிடியான நடவடிக்கையால் அதுவும் நின்று போக மர வியாபாரிகள் வெளிநாட்டில் இருந்து மரங்களை இறக்குமதி செய்கின்றனர் தொடங்கியுள்ளனர். போதிய மரங்கள் இந்தியாவில் கிடைக்கவில்லை என்பதால் வெளிநாட்டிலிருந்து வாங்குகின்றனர் என்று கூறுகின்றனர்.
மர வியாபாரிகள் இந்தோனேசியா, மலேசியா, நைஜீரியா போன்ற வெளிநாடுகளிலிருந்து வேங்கை, தேக்கு ஆகிய மரங்களை இறக்குமதி செய்கின்றனர். இறக்குமதி செய்யப்பட்ட மரங்கள் தூத்துக்குடிக்கு கடல் மார்க்கமாக வந்து சேர்கிறது. தூத்துக்குடியில் இருந்து சுற்றியுள்ள பகுதியில் மர வியாபாரிகள் தேக்கு வேங்கை போன்ற மரங்களை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.
60 வருடமாக மர வியாபார தொழில் இருக்கும் மாரிமுத்து அவர்கள் இது தொடர்பாக நம்மிடம் பேசினார் அதில், ”மலேசியா நைஜீரியா இந்தோனேசியா ஆகிய வெளிநாடுகளில் இருந்து நாங்கள் மரங்களை இறக்குமதி செய்து விற்று வருகிறோம்.
முன்பு இந்தியாவில் கிடைக்கும் அப்பொழுது விலை குறைவாக இருந்தது தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் விலை அதிகரித்து உள்ளது, இருந்தாலும் எங்களுக்கு வேறு வழியில்லாததால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் மரங்களையே வாங்கி விற்று வருகிறோம்.” என்று தெரிவித்தார்.
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு நடமாடும் மருத்துவமனை மூலம் மருத்துவ முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டெங்கு காய்ச்சலை தடுக்க மழைநீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களில் கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும். வீட்டின் சுற்றுப்புறங்களில் உள்ள உபயோகமற்ற பொருட்களை
கூட்டணியில் இருந்து கொண்டே திமுகவை எதிர்க்கும் ஆதவ் அர்ஜுனா!
பெஞ்சல் புயல்; உயிரிழந்த மின் ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இது ஒன்னும் உங்க அப்பன் வீடில்ல; பிக் பாஸில் ஜாக்குலினை வறுத்தெடுத்த தர்ஷிகா!
தென்கொரியாவில் அவசரநிலையை நீக்க மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல்
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று நிவாரணம் வழங்காதது ஏன்? விஜய் விளக்கம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!