அதிமுக 5 துண்டு, திமுக வெறும் விளம்பரம்... இனி நாமதான் - அன்புமணி

அதிமுக 5 துண்டு, திமுக வெறும் விளம்பரம்... இனி நாமதான் - அன்புமணி

  டிசம்பர் 31, 2022 | 10:01 am  |   views : 1906


பட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்,''2022-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2023-ஆம் ஆண்டை வரவேற்போம்'' என்ற தலைப்பில் இன்று நடைபெற்றது. புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில், சுங்கச்சாவடி அருகில் உள்ள சங்கமித்ரா திருமண அரங்கத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், மே 5ம் தேதி சித்ரா பவுர்ணமி தினத்தையொட்டி மீண்டும் வன்னியர் சங்க மாநாடு நடத்தப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.



தொடர்ந்து பேசிய அவர், “பாமக ஒன்று இல்லை என்றால் தமிழகத்திற்கு சமச்சீர் கல்வி வந்து இருக்காது; லாட்டரி ஒழிந்து இருக்காது; இந்தியாவிற்கே நாம் வழிகாட்டி. 108 ஆம்புலன்ஸ் நாம் கொண்டு வந்தது; ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்றாலும் மக்களுக்காக உழைக்கிறோம். காலையில் நிறுவனர் அறிக்கை விட்டால் மாலையில் தீர்வு காணப்படுகிறது. அய்யா கோரிக்கைகளை ஸ்டாலின் நிறைவேற்றுகிறார். பாமக-திமுகவுடன் சேர்ந்து விடுமோ என கேட்கிறார்கள். நமது இலக்கு தமிழக வளர்ச்சிதான்” என அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டார்.



நிலக்கரியை விட தரம் குறைவான லிக்னைட்டை எடுப்பதற்காக நெய்வேலியில் 25,000 ஏக்கர் விளைநிலங்களை பறிக்க முயற்சி நடப்பதாகவும் அதற்கு 2 அமைச்சர்கள் ஆதரவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.



"A" என்று தொடங்கும் தனியார் நிறுவனம் என்எல்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்காகவே இந்த விவசாய நிலங்களை கைப்பற்றும் முயற்சி தீவிரமாக நடந்து வருவதாகவும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.



Also read...  கட்டணமின்றி ஆவணங்களை மீண்டும் பெற சிறப்பு முகாம்கள் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு


மேலும், “என்.எல்.சி நிறுவனத்திற்காக நிலத்தை தாரை வார்த்தவர்களில் பலர் உரிய இழப்பீடு கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்நிறுவனம் தனியார் வசமாக போகிறது என்ற தகவலும் அதற்காகவே பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் முயற்சி என்ற தகவலும் நெய்வேலி சுற்றுவட்டார மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



இப்ப நமக்கு ஏற்ற அரசியல் சூழல் இருக்கிறது. தமிழகத்தில் கட்சிகள் உடைந்து கிடைக்கிறது. சில கட்சிகள் விளம்பரம் செய்கிறார்கள். ஒரு கட்சி தலைவர் தினமும் மீடியா பார்கிறார். மற்றொருவர் வாட்ச் காட்டுகிறார். நமக்கு அது வேண்டாம். வளர்ச்சியை நோக்கி செல்வோம். அங்கீகாரம் வருகிறது. நம்மை விட்டால் தமிழக மக்களுக்கு வழியில்லை. இரு கட்சிகளையும் 50 ஆண்டு காலம் மக்கள் பார்த்து வெறுத்து விட்டனர். அதிமுக 5 துண்டாகி விட்டது. திமுக விளம்பரம்தான். அடுத்து நாம் தான் மக்களுக்கான கட்சி” என குறிப்பிட்டார்.





குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை - தமிழக அரசு அறிவிப்பு!

2023-12-09 15:26:30 - 6 hours ago

குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை - தமிழக அரசு அறிவிப்பு! மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையில் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. இதில் இன்னும் சில பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. எனினும், பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது.


கட்டணமின்றி ஆவணங்களை மீண்டும் பெற சிறப்பு முகாம்கள் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

2023-12-09 15:17:51 - 6 hours ago

கட்டணமின்றி ஆவணங்களை மீண்டும் பெற சிறப்பு முகாம்கள் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த