INDIAN 7

Tamil News & polling

கோபமாக வெளியேறிய ஆளுநர்.. முதல்வரின் ரியாக்ஷன்.. இணையத்தில் பரபரக்கும் சட்டமன்ற நிகழ்வுகள்

09 ஜனவரி 2023 12:19 PM | views : 867
Nature

2023ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடரில் பங்கேற்ற ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த பரபரப்பு தீர்மானத்தால் கோபமுடன் பாதியிலேயே வெளியேறினார். சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வுகள் தான் இணையத்தில் ஹாட் டாப்பிகாக மாறி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் இணையத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. சட்டப்பேரவையில் ஆளுநரை அவமதித்துவிட்டார்கள் என பாஜகவினர் தங்களது எதிர்ப்பையும் தேசிய கீதம் இசைக்கும் முன்பே ஆளுநர் வெளியேறியது சட்டமன்ற மாண்பு இல்லை என திமுக கூட்டணி கட்சியினரும் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டமன்றம் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரைக்காக கூடியது. சட்டமன்றத்திற்குள் ஆளுநர் வந்தபோது மற்றும் அதன் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு வாழ்க, தமிழ்நாடு வாழ்க என முழக்கம் எழுப்பினர். என் இனிய சகோதர, சகோதரிகளே புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் எனக் கூறி உரையைத் தொடங்கினார் ஆளுநர். ஆளுநர் உரை நிகழ்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எம்.எல்.ஏ.க்கள் முழக்கம் எழுப்பியவாறு பேரவையின் மையப் பகுதிக்கு வந்து கண்டனங்களை பதிவு செய்தனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

ஆளுநர் உரையில், “கொரோனா 2 மற்றும் 3வது அலையை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டது, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் பறிக்கிறது, காலை உணவுத் திட்டம் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது” என பேசினார். ஆளுநர் தனது உரையில் திராவிட மாடல், சமூகநீதி, பெரியார், அண்ணா, அம்பேத்கர், மாநில மொழிகளை அலுவல் மொழியாக்குவது உள்ளிட்ட வார்த்தைகள் இருந்தபோதும் அதனை தவிர்த்துவிட்டார். ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழாக்கம் செய்தபோது இந்த வார்த்தைகள் இடம்பெற்றன.

வரலாற்றில் முதல்முறையாக ஆளுநர் உரை முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு அரசு தயாரித்த அறிக்கையை படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தது மிகவும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்த அவர், அச்சிடப்பட்டதை மீறி ஆளுநர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போதே, தேசிய கீதம் இசைக்கும் முன்பு பாதியிலேயே ஆளுநர் வெளியேறினார். முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்த சபாநாயகர், அச்சிடப்பட்டவை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என அறிவித்தார்.

இதனிடையே சட்டசபை நிகழ்வுகள் ஒருபக்கம் பரபரப்பாக செல்ல மறுபுறம் இணையத்தில் இந்த நிகழ்வுகள் தொடர்பான கருத்துகள் வேகம் எடுக்க தொடங்கியது. சட்டசபையில் ஆளுநர் ரவியின் செயல்பாடுகளுக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமில்லாமல் நெட்டிசன்களும் தங்களது எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர். ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறும் போது முதல்வரின் ரியாக்ஷன் உள்ளிட்ட புகைப்படங்களை பதிவிட்டு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். #GetOutRavi என்ற ஹேஷ்டேக் மட்டுமின்றி ஆளுநர் ரவிக்கு எதிராக மேலும் பல ஹேஷ்டேக்குகளும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1,595 கோடியில் 111 முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, 212 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,

Image கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.9.67 கோடியில் ஆக்கி மைதானம் கட்டப்பட்டுள்ளது. 6,500 சதுர மீட்டர் பரப்பளவில், சர்வதேச தரத்தில் இந்த ஆக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. ஆக்கி மைதானத்தை சுற்றிலும் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. இரவிலும்

Image மதுரை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக எத்தனை தொகுதிகள் என்று முடிவாகிவிட்டதா?

Image சென்னை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

Image சென்னை, தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.

Image சென்னையில் எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய 3 நூல்களை வெளியிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:- அரசியல் புரட்சியின் அடையாளமாக திமுக விளங்குகிறது. திராவிட மாடல் என்றாலே சிலருக்கு எரிகிறது. அவர்களுக்கு எரிய

Image சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக எங்களது நிலைப்பாட்டை அடிக்கடி



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்