POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

கடவுளே சொன்னாலும் மத்திய அரசு என்றுதான் அழைப்போம்: அன்புமணி ராமதாஸ்

4 years ago 05 ஜூலை 2021 08:37 AM | views : 153
மத்திய அரசு என்றுதான் தாங்கள் அழைப்போம் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பேச்சு என அனைத்திலும் ஒன்றிய அரசு என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஒன்றிய அரசு வார்த்தையை பயன்படுத்த பாஜக சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது.


இருப்பினும், ஒன்றிய அரசு என்பதை பயன்படுத்துவது சமூக குற்றம் அல்ல எனவும், அதனை தொடர்ந்து பயன்படுத்துவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஒன்றிய அரசு தொடர்பாக அதிமுக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளன.


இந்த நிலையில் பாமக நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி, ஒன்றிய அரசு தொடர்பாக கருத்து தெரிவித்தார். எங்களை பொறுத்தவரை மத்திய அரசு என்று தான் அழைப்போம், பெயரை மாற்றுவதால் ஒன்றும் ஆகப்போவது இல்லை என்று அன்புமணி கூறினார்.


திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைப்போம் என வாக்குறுதி அளித்தனர் என்ற அவர், ஆனால் இப்போது கேட்டால் தேதி சொல்லவில்லை என கூறுகின்றனர் என்றும், அது ஆக்க பூர்வமான கருத்து இல்லை, ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் குறைக்கலாம் எனவும் கோரிக்கையை முன்வைத்தார். தமிழக அரசு பொருளாதார நிபுணர்கள் குழு அமைத்துள்ளதை வரவேற்கிறோம் என்றும் அவர் கூறினார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் திமுக DMK VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK பாஜக BJP ADMK AMMK தவெக ANNAMALAI எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS MK STALIN TTV DHINAKARAN AIADMK மு.க.ஸ்டாலின் TAMIL NADU கனமழை டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் உதயநிதி ஸ்டாலின் PMK பாமக அன்புமணி ராமதாஸ் தமிழகம் முக ஸ்டாலின் திருமாவளவன் கோவை கைது ரஜினிகாந்த் இந்திய அணி CONGRESS EDAPPADI PALANISWAMI INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN கொலை சட்டசபை தேர்தல் COIMBATORE KEERTHY SURESH PARLIAMENT ELECTION அமமுக தேவர் வடகிழக்கு பருவமழை பிரதமர் மோடி வன்னியர் தமிழ்நாடு தீபாவளி தென்காசி THIRUMAVALAVAN NELLAI AJITH TAMIL ACTRESS OPS SURIYA நெல்லை ஓபிஎஸ் சீமான் NORTHEAST MONSOON கள்ளக்காதல் TAMILAGA VETTRI KAZHAGAM தூத்துக்குடி சூர்யா அன்புமணி தமிழக சட்டசபை தேர்தல் அஜித் பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம் விடுமுறை PRIME MINISTER MODI ASSEMBLY ELECTIONS கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION மதுரை CSK BIGG BOSS TAMIL