பெயரளவில் சமூக நீதி என்று நாடகம் ஆடும் தி.மு.க - அண்ணாமலை அறிக்கை

பெயரளவில் சமூக நீதி என்று நாடகம் ஆடும் தி.மு.க - அண்ணாமலை அறிக்கை

  பிப்ரவரி 24, 2023 | 04:41 pm  |   views : 1921


சென்னை:பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,மத்திய அரசு, ஆண்டுதோறும் பட்டியல் பிரிவு மக்கள் முன்னேற்றத்திற்காக, மாநிலங்களுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கி வருகிறது.



ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகள் நிதி, பட்டியல் பிரிவு மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்திட மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் SCSP திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி, முந்தைய ஆட்சிக் காலத்தில் (2016-2021) சுமார் 2900 கோடி பயன்படுத்தப்படாமல் இருந்து வந்திருக்கிறது, திமுக ஆட்சியில், 2021-2022 ஒரு ஆண்டிலேயே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 2418 கோடி ரூபாய் பயன்படுத்தப்படவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளிவந்திருக்கும் செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.



மேலும் 2022-23 நிதி ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான தகவலின்படி மத்திய அரசு தமிழகத்தின் பட்டியிலின சகோதர சகோதரிகளுக்கு ஒதுக்கிய 16,442 கோடி ரூபாய் நிதியில், தமிழக அரசு 10,466 கோடி ரூபாய் செலவிடாமல் உள்ளது என்ற செய்தியை கேட்டு மீண்டும் ஒருமுறை அதிர்ச்சிக்குள்ளானேன் . கல்வி, வீட்டு வசதித் திட்டங்கள், வேலைவாய்ப்பு, நூலகங்கள், மாணவர் விடுதிகள் போன்ற அடிப்படைத் தேவைகள் பல நிறைவேற்றப்படாமல் இருக்க, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியையும் முழுவதுமாகப் பயன்படுத்தாமல் இருப்பது, திமுக அரசின் மெத்தனத்தையும் சமுதாயத்தில் பின் தங்கியிருக்கும் மக்கள் மீதான கடும் அலட்சிய போக்கையும் காட்டுகிறது.



தமிழக பட்டியல் இன சகோதர சகோதரிகள் தினம் தினம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் சில, மாநில பட்டியல் மற்றும் பழங்குடி மக்களுக்கான ஆணையத்தில் போதுமான அளவு ஊழியர்கள் இல்லாததும், மாநில அரசிடம் இருந்து நிதி சரிவர ஒதுக்கப்படாததும் தான் என செய்திகள் வெளிவந்திருக்கின்றன. பல மாவட்டங்களில் பட்டியல் இன மக்கள் வாழும் கிராமங்களில், கழிப்பறை வசதிகள் கூட அமைத்துத் தரப்படவில்லை என்ற செய்திகளும் நாளிதழ்களில் வெளிவந்திருக்கின்றன. இவை தவிர, தமிழகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் மாணவர் விடுதிகள், அடிப்படை வசதிகளே இல்லாத அவல நிலையில் இருக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த பட்டியல் பிரிவு மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை சரிவர வழங்கப்படாமல் இருக்கிறது.



Also read...  கோவையில் ஒரு லட்சம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இல்லை : அண்ணாமலை


ஆதிதிராவிட நலத் துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லை. செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் எத்தனையோ இருக்க, அவற்றைப் பற்றிச் சிறிதும் கவலை இல்லாமல், மத்திய அரசு வழங்கும் நிதியையும் பயன்படுத்தாமல், தொடர்ந்து பட்டியல் பிரிவு சகோதர சகோதரிகளை வஞ்சித்து வருகிறது திறனற்ற திமுக. இது மட்டுமல்லாது, பட்டியல் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, மற்ற திட்டங்களுக்குப் பயன்படுத்துவதாகவும் திமுக அரசின் மேல் குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரை பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டபோது, இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதாக அலட்சியமாகப் பதிலளித்திருக்கிறார் அமைச்சர்.



பொதுமக்கள் மேல், திமுகவின் அக்கறை இந்த அளவில்தான் இருக்கிறது. பெயரளவில் சமூக நீதி என்று மேடை மேடையாக நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, பட்டியல் இன சகோதர சகோதரிகள் முன்னேற்றத்துக்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முன்னெடுத்து வரும் நலத்திட்டங்களைச் செயல்படுத்த திறனற்ற திமுக அரசு முன்வர வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.


எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




கோவையில் ஒரு லட்சம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இல்லை : அண்ணாமலை

2024-04-19 15:48:51 - 21 hours ago

கோவையில் ஒரு லட்சம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இல்லை : அண்ணாமலை தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்த நிலையில் கோவை மக்களவை தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என


தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு

2024-04-19 15:40:29 - 21 hours ago

தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின்


மத்தியில் மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக வருவது தான் நாட்டுக்கு நல்லது - டி.டி.வி. தினகரன்

2024-04-19 13:42:24 - 23 hours ago

மத்தியில் மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக வருவது தான் நாட்டுக்கு நல்லது - டி.டி.வி. தினகரன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்காக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர். இந்த நிலையில்,


கோவையில் பாஜக பணப்பட்டுவாடா... ரூ 81,000 மற்றும் பூத் சிலிப் பறிமுதல்!

2024-04-18 07:00:35 - 2 days ago

கோவையில் பாஜக பணப்பட்டுவாடா... ரூ 81,000 மற்றும் பூத் சிலிப் பறிமுதல்! கோவையில் பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த ரூபாய் 81 ஆயிரம் மற்றும் வாக்காளர்கள் விவரம் அடங்கிய பூத் சிலிப் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ஒரே கட்டமாக நாளை (19 ஆம் தேதி) மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்த நிலையில்,


தி.மு.க.வை தோல்வியடைய செய்து மக்கள் தண்டிக்க வேண்டும்

2024-04-17 07:33:01 - 3 days ago

தி.மு.க.வை தோல்வியடைய செய்து மக்கள் தண்டிக்க வேண்டும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தான் மத்தியில் மீண்டும் அமைய வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பம் ஆகும். இந்தியா முழுவதும் வீசும் அதே மோடி ஆதரவு அலை தான் தமிழ்நாட்டிலும் வீசுகிறது. தமிழகத்தின் பெரும் பான்மையான பகுதிகளுக்கு பரப்புரை சென்று வந்ததன் மூலம் மோடி


தமிழ் புத்தாண்டு வாழ்த்து ஏன் அச்சிடவில்லை? ஆவின் நிர்வாகம் விளக்கம்

2024-04-16 04:28:29 - 4 days ago

தமிழ் புத்தாண்டு வாழ்த்து ஏன் அச்சிடவில்லை? ஆவின் நிர்வாகம் விளக்கம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி அச்சிட்டு வெளியிடப்படவில்லை என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக, ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆவின் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான பண்டிகைகளுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் வகையில் பால் பாக்கெட்டுகளில்


வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை!

2024-04-15 10:54:01 - 5 days ago

வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட


அமைச்சர் அன்பில் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

2024-04-15 10:52:48 - 5 days ago

அமைச்சர் அன்பில் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறவுள்ளது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்