தீபாவளி பண்டிகையை ஒட்டி சர வெடி வெடிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது அரசு விதிமுறைகளின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விருதுநகர் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உச்ச நீதிமன்றம் 29 ஆம் தேதி ( இன்று) அறிவித்த தீர்ப்பில், வரும் தீபாவளி பண்டிகை மற்றும் இன்ன பிற நிகழ்வுகளின் பொழுது சாதாரண வகையிலான பட்டாசுகளின் பயன்பாட்டிற்கு எந்தவிதமான தடையுமில்லை.
ஆனால், பொதுமக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பேரியம் உப்பு கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது வெடிக்கவோ தடை விதித்து ஆணையிட்டுள்ளது.உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகள் சரவெடி மற்றும் பேரியம் உப்பு கலந்த பட்டாசுகள் ஆகியவற்றை தயாரிக்க தடை விதித்தும், சேமிப்பு கிட்டங்கிகள் மற்றும் பட்டாசுக் கடைகளில் மேற்படி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை சேமித்து வைக்கவோ, கொண்டு செல்லவோ, விற்பனை செய்யவோ கூடாது.
பொதுமக்கள் மேற்படி தடை செய்யப்பட்ட பட்டாசு வகைகளை வெடிக்கக் கூடாது எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேற்படி உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது அரசு விதிமுறைகளின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?
மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்
விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
கூலி - திரை விமர்சனம்!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!