POLLING 📊 TN ELECTION 2026

 

டெல்லி மெட்ரோவில் மது பாட்டில்கள் எடுத்து செல்ல அனுமதி!

2 years ago 30 ஜூன் 2023 10:44 AM | views : 189
டெல்லி மெட்ரோவில் நபருக்கு இரண்டு மது பாட்டில்களை எடுத்து செல்ல அனுமதி வழங்கி டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும், டெல்லி மெட்ரோவில் மது குடிப்பது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைன் வழியைத் தவிர டெல்லி மெட்ரோவில் மது பாட்டில்கைள எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், டெல்லி மெட்ரோவில் நபருக்கு இரண்டு சீல் வைக்கப்பட்ட மது பாட்டில்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் கூறுகையில், "சிஐஎஸ்எஃப் மற்றும் டிஎம்ஆர்சி அதிகாரிகள் அடங்கிய குழு பட்டியலை மதிப்பாய்வு செய்தது.

திருத்தப்பட்ட பட்டியலின்படி, ஒரு நபருக்கு சீல் செய்யப்பட்ட இரண்டு மது பாட்டில்கள் டெல்லி மெட்ரோவில் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸில் உள்ள விதிமுறைகளுக்கு இணையாக கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது" என்று கூறியது.மெட்ரோ பயணிகள் பயணத்தின் போது சரியான ஆவணங்களை பராமரிக்குமாறும் மெட்ரோ நிர்வாகம் சார்பில் கேட்கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மெட்ரோவில் பயணிகள் யாரேனும் குடிபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்டால், அவர்கள் மீது சட்ட விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் டெல்லி மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK AMMK தவெக ADMK ANNAMALAI MK STALIN டிடிவி தினகரன் TAMIL NADU TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி கனமழை உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் AIADMK மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் PMK பாமக தமிழகம் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் கோவை கைது ரஜினிகாந்த் CONGRESS UDHAYANIDHI STALIN சட்டசபை தேர்தல் திருமாவளவன் இந்திய அணி INDIAN CRICKET TEAM கொலை சீமான் தமிழ்நாடு COIMBATORE வடகிழக்கு பருவமழை அமமுக பிரதமர் மோடி AJITH தென்காசி தீபாவளி KEERTHY SURESH நெல்லை ASSEMBLY ELECTIONS NELLAI PARLIAMENT ELECTION TAMIL ACTRESS TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் THIRUMAVALAVAN OPS EDAPPADI PALANISWAMI திருப்பரங்குன்றம் NORTHEAST MONSOON SEEMAN அஜித் PRIME MINISTER MODI CSK வன்னியர் MADURAI தமிழக சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் விடுமுறை கள்ளக்காதல் பாலியல் தொல்லை மதுரை தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION