கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 தொழிலாளர்கள் பலி- ஒப்பந்ததாரர் மீது வழக்கு

கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 தொழிலாளர்கள் பலி- ஒப்பந்ததாரர் மீது வழக்கு

  ஜூலை 04, 2023 | 03:30 pm  |   views : 1753


கோவை:கோவையில் இன்று தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து கட்டுமான தொழிலாளர்கள் 4 பேர் பலியாகியுள்ளனர். ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



கல்லூரியில் ஏற்கனவே இருந்த சிறிய பக்கவாட்டு சுவரை ஒட்டி புதிதாக 10 அடி உயரம் கொண்ட பக்கவாட்டு சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இன்று கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, பழைய சுவர் திடீரென தொழிலாளர்கள் மீது இடிந்து விழுந்துள்ளது. இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர்.



இறந்தவர்களில் 3 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. காயமடைந்தவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், விபத்து தொடர்பாக ஒப்பந்ததாரர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.





ஊழல் குற்றச்சாட்டில் சந்திரபாபு நாயுடு கைது..!

2023-09-09 02:35:20 - 2 weeks ago

ஊழல் குற்றச்சாட்டில் சந்திரபாபு நாயுடு கைது..! ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது; 2019- ல் சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ.317 கோடி ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், நந்தியாலா போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்


முத்துராமலிங்கத் தேவர், அண்ணாதுரை மோதல்.. நடந்தது என்ன?

2023-09-21 04:25:08 - 2 days ago

முத்துராமலிங்கத் தேவர், அண்ணாதுரை மோதல்.. நடந்தது என்ன? தேவர், அண்ணாதுரை... நடந்தது என்ன? மதுரையில் கடவுளை பற்றி அண்ணாதுரை பேசியதும், அதற்கு தேவரின் எச்சரிக்கையும் தமிழக அரசியலில் மிக முக்கியமான வரலாறு.. இந்த செய்தியை பற்றி பல்வேறு கருத்துக்கள் பகிரப்படுகின்றன. இந்த வரலாறை பற்றி பேசிய அண்ணாமலை அவர்களுக்கு பாராட்டுக்கள்.. நான் பேட்டி எடுத்த பல


பெரியார் மணியம்மை திருமணம் பற்றி அண்ணா எழுதிய கட்டுரை!

2023-09-20 14:27:50 - 2 days ago

பெரியார் மணியம்மை திருமணம் பற்றி அண்ணா எழுதிய கட்டுரை! அண்ணா எழுதிய கட்டுரை : பெரியார் மணியம்மை திருமணம் 9.7.1949ல் நடந்த பெரியார் - மணியம்மை திருமணத்தை கண்டித்து “ திராவிட நாடு ” பத்திரிகையில் 03.07.1949 அண்ணா எழுதிய கட்டுரை : சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 ம் ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு அவர்


திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் கட்டிய ஆண்டிகள் கதை!

2023-09-20 16:42:13 - 2 days ago

திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் கட்டிய ஆண்டிகள் கதை! ஆண்டிகள் கூடிமடம் கட்டிய கதை என்று கிண்டலாக கூறுவார்கள் ஆனால் !.. உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம். பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு