POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை - நடிகர் ரஜினிகாந்த்

4 years ago 12 ஜூலை 2021 08:10 AM | views : 191
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார்.1 மணி நேரம் நடந்த ஆலோசனைக்குப் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார். அதில், ரஜினி மக்கள் மன்றத்தின் நிலைமை குறித்து மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு விளக்க வேண்டியது தன்னுடைய கடமை என்றும், அரசியலில் ஈடுபடும் நோக்கில் மக்கள் மன்றத்தை தொடங்கி பல பதவிகள், சார்பு அணிகள் உருவாக்கியதாகவும் கூறி உள்ளார். கால சூழலால் நினைத்தது சாத்தியப்படவில்லை என்று குறிப்பிட்டு உள்ள அவர், ரஜினி மக்கள் மன்றத்தை கலைப்பதாக தெரிவித்து உள்ளார்.வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போகும் எண்ணம் தனக்கு இல்லை என்று கூறியுள்ள ரஜினிகாந்த்,....இனி ரஜினி மக்கள் மன்றம் சார்பு அணிகள் எதுவும் இன்றி, ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அறிவித்து உள்ளார். மேலும், தனது அறிக்கையின் இறுதியில் வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த் என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK பாஜக BJP ADMK தவெக ANNAMALAI AMMK எடப்பாடி பழனிசாமி MK STALIN TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் AIADMK கனமழை டிடிவி தினகரன் TAMIL NADU PMK உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் பாமக முக ஸ்டாலின் காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் கோவை கைது சட்டசபை தேர்தல் இந்திய அணி தமிழகம் திருமாவளவன் CONGRESS ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN EDAPPADI PALANISWAMI COIMBATORE INDIAN CRICKET TEAM வடகிழக்கு பருவமழை அமமுக PARLIAMENT ELECTION வன்னியர் பிரதமர் மோடி தேவர் கொலை KEERTHY SURESH TAMIL ACTRESS நெல்லை THIRUMAVALAVAN சீமான் தென்காசி OPS தீபாவளி ASSEMBLY ELECTIONS SURIYA ஓபிஎஸ் NELLAI AJITH தமிழ்நாடு தூத்துக்குடி NORTHEAST MONSOON BIGG BOSS TAMIL கள்ளக்காதல் சூர்யா விடுமுறை தமிழக சட்டசபை தேர்தல் திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை அன்புமணி அஜித் TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை PRIME MINISTER MODI ELECTION COMMISSION CSK கொரோனா