POLLING 📊 TN ELECTION 2026

 

நாடாளுமன்ற அவைக் குறிப்பில் இருந்து பெரியார் பெயர் நீக்கம்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

2 years ago 11 டிசம்பர் 2023 03:48 PM | views : 177
“நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது” என நாடாளுமன்ற அவைக் குறிப்பிலிருந்து பெரியார் பெயர் நீக்கப்பட்ட சம்பவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மாநிலங்களவையில் எம்.பி. எம்.எம்.அப்துல்லா உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரியாரின் பெயரும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது.


மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது தந்தை பெரியார்தான் இதற்குக் காரணம் என்று பிரதமர் வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம். மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும் - எப்போதும் - எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம். அனைவரும் பயன்படுத்துங்கள்!” என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக AMMK ADMK ANNAMALAI டிடிவி தினகரன் TAMIL NADU MK STALIN பாராளுமன்ற தேர்தல் கனமழை உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் AIADMK PMK பாமக அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் தமிழகம் CONGRESS ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN சட்டசபை தேர்தல் கைது கோவை திருமாவளவன் சீமான் இந்திய அணி INDIAN CRICKET TEAM கொலை தமிழ்நாடு COIMBATORE AJITH பிரதமர் மோடி தென்காசி KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை PARLIAMENT ELECTION அமமுக தீபாவளி THIRUMAVALAVAN EDAPPADI PALANISWAMI NELLAI தேவர் நெல்லை ASSEMBLY ELECTIONS TAMIL ACTRESS OPS TAMILAGA VETTRI KAZHAGAM கள்ளக்காதல் விடுமுறை PRIME MINISTER MODI தமிழக சட்டசபை தேர்தல் பாலியல் தொல்லை தூத்துக்குடி திருப்பரங்குன்றம் CSK வன்னியர் SEEMAN ஓபிஎஸ் NORTHEAST MONSOON மதுரை MADURAI ELECTION COMMISSION அஜித் கீர்த்தி சுரேஷ்