ஏற்றி விடும் ஏணிகளை எட்டி உதைக்கும் வடிவேலு:
சில தினங்களுக்கு முன்பு கலைஞர் 100 நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. விழாமேடைக்கு கார் பார்க்கிங்கில் இருந்து பேட்டரி கார் மூலம் முக்கிய திரையுலகினர் அழைத்து செல்லப்பட்டனர். அதில் ஆறேழு பேர் பயணம் செய்யலாம்.
ஆளுக்கு ஒரு பேட்டரி கார் வருமென நினைத்திருந்தார்கள். ஆனால் ஏற்கனவே சோனியா அகர்வால் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே நயன்தாரா அமர வைக்கப்பட்டதால்..அப்செட் ஆனார் அவர்.
அடுத்து வடிவேலு வந்தார். பேட்டரி காரில் ராஜ்கிரணுக்கு அருகே அமர்வோம் என அவர் எதிர்பார்க்கவில்லை. அதனால் கடுப்பான வடிவேலு... உடனே வண்டியை நிறுத்த சொல்லிவிட்டு கீழே இறங்கிவிட்டார். ராஜ்கிரணை ஏறிட்டு கூட பார்க்கவில்லை.
அதன்பிறகு வந்த பேட்டரி காரில் டிரைவருக்கு அருகே அமர்ந்து விழா மேடைக்கு சென்றார். நிகழ்ச்சியில் பேசியும், பாடியும் கைத்தட்டல் வாங்க ஒத்திகை பார்த்துவிட்டு வந்தவருக்கு... அந்த வாய்ப்பு அமையாமல் போனதால் அதிருப்தி அடைந்தார்.
வடிவேலுவின் வளர்ச்சிக்கு வாய்ப்பு அளித்தவர்கள் ராஜ்கிரணும், கேப்டனும். டி.ராஜேந்திரன் என் தங்கை கல்யாணி படத்தில் அறிமுகமாகி அதில் சில நொடிகள் நடித்தார்.
அதன்பிறகு முறைப்படி அவரை அழைத்து காமடி கேரக்டரும், ஒரு பாடல் காட்சியும் அளித்து உதவியர் ராஜ்கிரண். அடுத்து சின்னக்கவுண்டரில் வாய்ப்பு தந்தார் விஜயகாந்த்.
என் ராசாவின் மனசில், சின்னக்கவுண்டர் படங்களில் ஏற்கனவே கவுண்டமணி, செந்தில் போன்ற காமெடியன்கள் இருக்கும்போது இவர் எதற்கு என மற்றவர்கள் கூறியும் 'பரவாயில்லை. திறமைசாலி. வாய்ப்பு அளிக்கலாம்' எனக்கூறி கைதூக்கி விட்டார்கள் ராஜ்கிரணும், கேப்டனும்.
தனக்கு வாழ்வளித்த ராஜ்கிரணை கூட பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருக்கிறார் வடிவேலு.
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?
உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்
விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
கூலி - திரை விமர்சனம்!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!