தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க. கூட்டணியில் தொகுதி உடன்பாடு கையெழுத்தாகி தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வில் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி எத்தனை இடங்களில் போட்டி?, எங்கெல்லாம் போட்டி? என்பதை இன்று சரத்குமார் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.க.வுடன் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் இணைத்துள்ளார். தி.நகரில் நடைபெற்ற கூட்டத்தில் அண்ணாமலை முன்னிலையில் இந்நிகழ்வானது நடைபெற்றது.
இதையடுத்து பேசிய சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைக்கிறோம். ஒவ்வொரு தேர்தலிலும் கோரிக்கை வைப்பது மட்டுமே நமது பாதையா? என யோசித்தேன். மக்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு இது. நிர்வாகிகளின் ஆதரவை தொடர்ந்து பாஜகவுடன் கட்சியை இணைத்துள்ளோம். இது சமத்துவ மக்கள் கட்சியின் முடிவு அல்ல, ஒரு எழுச்சியின் தொடக்கம். நமது சக்தியை மிகப்பெரிய சக்தியுடன் இணைப்பது என முடிவெடுத்துள்ளோம்.
சமத்துவ மக்கள் கட்சியை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சியமைக்கும். இவ்வாறு சரத்குமார் கூறினார். முன்னதாக பேசிய அண்ணாமலை, சரத்குமாரை தமிழகத்தில் அடைத்து வைக்க பா.ஜ.க. விரும்பவில்லை எனக்கூறினார்.
பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?
மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
காவல்துறை விசாரணையில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்திருந்த பேராசிரியர் நிகிதா பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. ஆனால் அந்த புகைப்படத்தில் இருப்பவர் பேராசிரியர் நிகிதா இல்லை என்ற உண்மை தற்போது தெரிய வந்துள்ளது. அந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என்ற உண்மையும்
ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி உள்பட 2 பேர் பலி
பொது வேலைநிறுத்தம் : கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை
பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து- தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்
2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!