POLLING 📊 TN ELECTION 2026

 

சீர்மரபினர் வகுப்பினருக்கு ஒரே சான்றிதழ் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2 years ago 16 மார்ச் 2024 10:21 AM | views : 199
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேய ஆட்சியில் குற்றப்பரம்பரை சட்டத்தினால் (Criminal Tribes Act) பாதிக்கப்பட்ட வகுப்பினர்கள், சீர்மரபினர் வகுப்பு என வகைப்படுத்தப்பட்டு மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருடன் சேர்த்து 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு 68 வகுப்பினர்கள் சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கருணாநிதி தலைமையிலான அரசால் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 29.7.2008இல் அரசாணை (நிலை) எண்.85-இல் தமிழ்நாடு சட்டம் 45/1994இன் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டு, சீர்மரபினர் வகுப்பினர் என சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.பின்னர், அரசாணை (நிலை) எண்.26. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள் 8.3.2019இல் வெளியிடப்பட்ட ஆணையில், மாநில அரசின் இடஒதுக்கீடு (20% reservation) மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் (DNC) என அழைக்கப்படுவர், எனவும் மத்திய அரசின் நலத்திட்ட பயன்களைப் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் (DNT) என அழைக்கப்படுவர் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட அரசாணைகளின்படி இரண்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவற்றை பெறுவதில் நடைமுறையில் சிரமம் உள்ளதாகவும் அதற்கு பதிலாக ஒரே சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அந்த கோரிக்கைகளை அரசு ஆய்வு செய்து, சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities / Denotified Tribes என இரண்டு சான்றிதழ்களுக்குப் பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க தெளிவுரைகள் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளேன். இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய தெளிவுரையின்படி, இனி வருவாய் அலுவலர்கள் வகுப்பினர்களுக்கு ஒரே சான்றிதழ் வழங்குவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities மற்றும் Denotified Tribes என இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கு பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/Nqrw48irWY— TN DIPR (@TNDIPRNEWS) March 16, 2024

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

திமுக விஜய் DMK VIJAY அதிமுக சென்னை CHENNAI BJP பாஜக அண்ணாமலை TVK AMMK தவெக ANNAMALAI ADMK MK STALIN டிடிவி தினகரன் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN கனமழை உதயநிதி ஸ்டாலின் AIADMK மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் பாமக தமிழக வெற்றிக் கழகம் PMK முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் தமிழகம் UDHAYANIDHI STALIN CONGRESS ரஜினிகாந்த் கைது கோவை சட்டசபை தேர்தல் இந்திய அணி தமிழ்நாடு திருமாவளவன் INDIAN CRICKET TEAM COIMBATORE கொலை சீமான் பிரதமர் மோடி அமமுக வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH AJITH PARLIAMENT ELECTION தீபாவளி தென்காசி EDAPPADI PALANISWAMI NELLAI OPS ASSEMBLY ELECTIONS TAMIL ACTRESS நெல்லை தேவர் THIRUMAVALAVAN TAMILAGA VETTRI KAZHAGAM விடுமுறை SEEMAN கள்ளக்காதல் அஜித் ஓபிஎஸ் NORTHEAST MONSOON மதுரை தமிழக சட்டசபை தேர்தல் MADURAI வன்னியர் தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION PRIME MINISTER MODI CSK திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை