"பசும்பொன் தேவர் இல்லையென்றால் காமராஜர் என்ற நபர் பெயர் தமிழ்நாட்டில் இல்லை"
விருதுநகர் வட்டாரத்திலும் ஐஸ்டிஸ் கட்சியினர் அட்டகாசம் செய்தனர். காமராஜரைப் பட்டப்பகலில் விருதுநகர் பஜார் தெப்பக்குளம் ஓரமாக வீதீயில் வேட்டியை உரித்து விட்டு இரண்டு சண்டியர்கள் காலால் வேட்டியை மிதித்துக் கொண்டனர். மீதி இரண்டு சண்டியர்கள் காமராஜ் மீது சாணி உருண்டைகளை எறிந்தனர். அத்துடன் இரவோடு இரவாக பட்டிவீரன் பட்டிக்குக் காமரைஜரைக் கொண்டு சென்று வாழைத் தோப்பில் வைத்து வெட்டிப் புதைக்க சதி செய்தனர்.
தேவர் விருதுநகர் வந்து காமராசரை விசாரித்திட அவரும் ஒப்புக் கொண்டார். அன்று இரவு "காமராஜ் சாதாரண ஏழைத் தொண்டன் என்று இங்குள்ள ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் நினைத்தால் அவர்களுக்காக அனுதாபப்படுகிறேன். காமராஜுக்குப் பின்னால் காங்கிரஸ் மகாசபை இருக்கிறது. அந்த மகாசபையில் எங்களைப் போல் எந்த விதத் தியாகத்திற்கும் தயாராக உள்ள கோடான கோடிப்பேர் இருக்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.
இரவோடு இரவாக காமராஜரைத் தூக்கிக்கொண்டு போய் கொலை செய்யப் போவதாகக் கேள்விப்படுகிறேன். அது உண்மையானால் இங்கே ஜஸ்டிஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.வி. ராமசாமி நாடாருக்கு நான் எச்சரிக்கையாகச் சொல்கிறேன். காமராஜர் மீது ஒரு துரும்புபடுமானால் நீங்கள் வீதியில் நிம்மதியாக நடமாட முடியாது. இரும்புக் கவசம் போட்டுக் கொண்டுதான் நடக்க முடியும்" என்று முழங்கினார்.
விருதுநகர் ஜில்லா போர்டு தேர்தலில் காமராஜர் சாதாரண காங்கிரஸ் தொண்டராக இருந்து போட்டியிட முன்வந்தார். அடியாட்கள் மூலம் நீதிக்கட்சியினர் காமராஜரைக் கடத்தினர்.
தேவர் இதை அறிந்து விருதுநகர் வந்து பொதுக்கூட்டம் போட்டு மேடையில் "இந்த கூட்டம் முடிந்தபின் நான் மேடையை விட்டு இறங்கு முன்பு காமராஜ் இங்கு வரவேண்டும். இல்லையேல் அவரை அடைத்து வைத்திருப்பவர்கள் அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டிவரும்" என்று எச்சரித்தார்.
ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் காமராஜரை விடுதலை செய்தனர். காமராசரும் நன்றி சொன்னார். நகராட்சிக்கு வரி செலுத்தும் வசதி இல்லாத காமராசருக்குத் தேவர் ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கி காமராசர் பெயரால் வரியைக்கட்டி தேர்தலில் நிறுத்தினார். காமராசர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.
காமராசரை "கிங மேக்கர்" என்பர். தேவரோ "கிங் மேக்கர் ஆப் கிங் மேக்கர்ஸ்" பிற்காலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக காமராஜர் பசும்பொன் தேவர் முன் மொழிந்தார்.
நூல்: பசும்பொன் களஞ்சியம்
தொகுப்பாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம்
காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை அவன் யார்?
பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்
விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
கூலி - திரை விமர்சனம்!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!