கோரோனா நோய்த் தொற்றின் முதலாவது அலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. புதுச்சேரியிலும் முதலாவது அலையில் முதியோர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு மே மாதத்தில் பரவிய இரண்டாவது அலையில் முதியோர்கள், நடுத்தர வயதினர், இளைஞர்கள் பாதிக்கப்பட்டனர். கடந்த ஜூன் மாதத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அரசின் ஊரடங்கு உத்தரவு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளினால் தொற்று படிப்படியாக குறைந்து, தற்போது தினசரி தொற்று 100லிருந்து 150 என்கிற அளவில் இருந்துவருகிறது. அதேசமயம் வீட்டில் உள்ள பெரியவர்கள் வெளியில் சென்றுவருவதால் தற்போது குழந்தைகளுக்கும் தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. நேற்று (15.07.2021) 1 முதல் 5 வயது வரையிலான 16 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதியானது. குழந்தைகளுக்கு கரோனா தொற்று பரவியதால் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதோ என்ற ஐயம் பொதுமக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், "புதுச்சேரியில் இதுவரை 21 குழந்தைகளுக்கு கரோனா தொற்று அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 1 வயது முதல் 5 வயது உள்ள 16 குழந்தைகளுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 பிறந்த குழந்தைகளின் தாய்க்கு கரோனா தொற்று உள்ளதால் இந்தக் குழந்தைகளுக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கரோனா தொற்று இருப்பதைக் கண்டு மக்கள் அச்சமடைய வேண்டாம்.
பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் நோய் தொற்று வராது. மேலும், குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் என்பதை ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தொற்று பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க 60 படுக்கைகள், வென்டிலேட்டர்கள் தயாராக உள்ளன" என்றார்.
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!