திருப்பூர், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் குணசேகர் தலைமையிலான பறக்கும் படையினர் நல்லூர் தேவாலயம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 36 வயது மதிக்கத்தக்க பெண் மது போதையில் இருந்தார். இடுப்பில் 3 கட்டுகள் பணம் வைத்திருந்தார். அவரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார்.
பணத்தை வாங்கி எண்ணிப்பார்த்தபோது ரூ.1½ லட்சம் இருந்தது தெரியவந்தது. தான் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் என்றும், பண்ணாரி அம்மன் கோவிலில் பிச்சை எடுத்த பணம் என்றும் அவர் கூறினார். உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாநகராட்சி உதவி ஆணையாளர் தங்கவேல்ராஜனிடம் ஒப்படைத்து கருவூலத்தில் சேர்த்தனர். மேலும் மதுபோதையில் இருந்த பெண்ணை ஆலங்காட்டில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?
அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
திருப்பூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் கார்த்திகா முருகவேல். பி.காம் பட்டதாரியான இவர் கோவையில் விடுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்தாண்டு மே மாதம் 6-ம் தேதி தன் தோழியுடன், கோவை காந்திபுரத்தில் உள்ள கே.எஃப்.சி (KFC) உணவகத்திற்குச் சென்று சிக்கன் சாப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வயிற்றுவலி, காய்ச்சல், வாந்தி போன்ற தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அறுபடை வீடுகளில் ஒன்றாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவில் திகழ்கிறது. திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக பணம், நகை ஆகியவற்றை செலுத்துகின்றனர். இந்த காணிக்கை அவ்வப்போது எண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில், கடந்த 28 நாட்களில் 1 கோடியே 59 லட்ச
செங்கோட்டையன் ஏன் எங்களை தவிர்க்கிறார்..? - எடப்பாடி பழனிசாமி பதில்
தி.மு.க. ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை? யார் சொன்னது சரி? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
நெல்லை - திருச்செந்தூர் ரயில் 25 நாள்களுக்கு ரத்து
நடிகை செளந்தர்யா மரணம் விபத்தல்ல, திட்டமிட்ட கொலை: மோகன் பாபு மீது புகார்!
மனித நேயம், சகோதரத்துவத்தை பின்பற்றுவோம்: இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜய் பேச்சு
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!