கோவை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக கோவை கணபதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ ப்பெருந்தகை எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசியதாவது:-இந்தியா கூட்டணிக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எழுச்சியோடு வாக்களிக்க மக்கள் தயாராகி ட்டனர்.
பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையில் சொன்ன எந்த வாக்குறுதியையுமே நிறைவேற்றவில்லை. ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சொன்னதில் 80 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார்.தற்போது நாட்டில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளது. அந்த போதைப்பொருள்கள் குஜராத்தில் உள்ள 2 துறைமுகங்களில் இருந்து தான் வருகிறது. அந்த துறை முகத்தை நடத்துவது யாரென பிரதமர் மோடிக்கு தெரியாதா? இந்த நாட்டை குட்டிச்சுவராக்க பா.ஜனதா துடித்துக்கொண்டு இருக்கிறது.
இந்த தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை எது சொன்னாலும் பொய் தான். தற்போது பிரதமர் மோடியும், அண்ணாமலையும் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசி வருகின்றனர். இந்திராகாந்தி தேசநலனுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் வாழ்ந்தவர். அவரை பிரதமர் மோடியும், அண்ணாமலையும் கிண்டல் செய்கின்றனர்.வெஜ் பேங் என்ற ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என அண்ணாமலை படித்து தெரிந்து கொள்ளட்டும். 1976-ம்ஆண்டு மார்ச் 23-ந்தேதி கச்சத்தீவுக்கு ஒரு ஒப்பந்தம்.வெஜ் பேங்குக்கு ஒரு ஒப்பந்தம் என்று 2 ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது. அந்த ஒப்பந்தம் பற்றி தெரிந்து கொண்டு அண்ணாமலை பேச வேண்டும்.
அதுதொடர்பாக என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? இந்திராகாந்தி போட்ட அந்த ஒப்பந்தத்தின்படி தான் கன்னியாகுமரியில் இருந்து 50 நாட்டிக்கல் மைல் தூரத்திலும், கொழும்புவில் இருந்து 150 நாட்டிக்கல் மைல் தூரத்திலும் உள்ள இந்திய எல்லையில், உலகத்தில் இல்லாத அளவுக்கு கனிம வளங்கள், கடல் வளங்கள் கடலுக்கு அடியில் இருக்கிறது என்று கண்டுபிடித்து சொல்லி இருக்கிறார்கள். எனவே அண்ணாமலை கச்சத்தீவு-வெஜ்பேங் ஒப்பந்தம் குறித்து தெரியாமல் எதுவும் பேசக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?
100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?
பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- கடந்த ஞாயிற்றுக்கிழமை(01.12.2024) இரவு ஏற்பட்ட பெஞ்சல் புயலின்போது திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம், துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட அண்டம்பள்ளம் மின்மாற்றியில் ஏற்பட்ட மின்தடையை
ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்தன. எனவே ஆளும் கட்சி மற்றும் அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வுசெய்து, ஆறுதல் கூறியும், நிவாரணங்கள் அளித்தும் வருகின்றனர். இதற்கிடையே, விழுப்புரம் மாவட்டத்தின் இருவேல்பட்டு பகுதிக்கு சென்ற வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் திமுக நிர்வாகிகள் மீது
திருவண்ணாமலையில் புயல் மழை காரணமாக நேற்று மிக கனமழை பெய்தது. அதிகபட்சமாக 37 சென்டிமீட்டர் மழை பதிவானது. சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் திருவண்ணாமலை வ. உ. சி. நகர் பகுதியில் மகா தீப மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அங்கிருந்து ராட்சத
லண்டனில் 3 மாத கால படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- லண்டன் சென்று படிப்பதற்கு அனுமதி அளித்த பாஜகவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது
விஜய்யுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா? திருமாவளவன் பதில்
அதிமுக துரோக வரலாற்றுக்கு எடப்பாடி பழனிசாமி அடையாளம்: மு.க.ஸ்டாலின் தாக்கு
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்- திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!