2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 9ம் தேதி டெல்லியில் கைது செய்தனர். இதையடுத்து, சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினார்.
மேலும், ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கும் சீல்வைக்கப்பட்டது.இதனிடையே, வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி ஜாபர் சாதிக்கின் மனைவி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, ஜாபர் சாதிக்கின் மனைவி மற்றும் குடும்பத்தினர் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புடன் இன்று காலை ஜாபர் சாதிக் வீட்டிற்குள் நுழைந்த அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஜாபர் சாதிக்கிற்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?
படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?
டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!