கடலூரில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான், பிரசாரத்தின்போது கிளி ஜோதிடம் பார்த்தார். அப்போது கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்று இருந்தது. இதற்கு மகிழ்ச்சி தெரிவித்த தங்கர்பச்சான், பின்னர் ஓட்டு கேட்க சென்றார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கிடையே, தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த செல்வராஜ் என்பவரையும், அதே பகுதியில் கிளி ஜோதிடம் பார்த்த சீனுவாசன் என்பவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ், கிளிகளை வளர்ப்பது குற்றம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
கிளி ஜோதிடர்கள் கைதுசெய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி சோதிடர் கூறியதை தி.மு.க.வால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த செல்வராஜ் மற்றும் சீனுவாசன் ஆகிய இரு ஜோதிடர்களையும் வனத்துறையினர் விடுவித்தனர்.
அவர்களிடம் இருந்த 4 கிளிகளையும் பறிமுதல் செய்த வனத்துறையினர், ஜோதிடர்களை எச்சரித்து விடுவித்தனர்.
பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்
விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
கூலி - திரை விமர்சனம்!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!