தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்காக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
இந்த நிலையில், சென்னை தாமோதரபுரம் வாக்குச்சாவடியில் அ.ம.மு.க.பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது குடும்பத்துடன் வந்து வாக்கினை செலுத்தினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டி.டி.வி. தினகரன் கூறியதாவது, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பின், தேனி மக்களவை தொகுதி அ.ம.மு.க கோட்டையாக மாறிவிட்டது. 100 சதவிகிதம் தமிழக மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்.
மத்தியில் மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக வருவது தான் நாட்டுக்கு நல்லது. சென்னை போன்ற மாநகரங்களில் மக்கள் மோடிக்கு ஆதரவாக உள்ளார்கள். அதை வாக்குப்பதிவு மூலமே நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்."மீண்டும் மோடி வருவது தான் நாட்டுக்கு நல்லது" - டிடிவி தினகரன்#thanthitv #loksabhaelection2024 #elections2024 #voteing #electionswiththanthitv #ttvdhinakaran pic.twitter.com/PGrTDwDEaK— Thanthi TV (@ThanthiTV) April 19, 2024
சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை அவன் யார்?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!