POLLING 📊 TN ELECTION 2026

 

கோவையில் ஒரு லட்சம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இல்லை : அண்ணாமலை

1 year ago 19 ஏப்ரல் 2024 03:48 PM | views : 163
தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்த நிலையில் கோவை மக்களவை தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"கோவையில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்திருந்தாலும், சோகமான விஷயம் என்னவென்றால் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. எந்த அடிப்படையில் பெயர்களை நீக்கியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. கணவருக்கு வாக்கு இருக்கிறது, ஆனால் மனைவிக்கு இல்லை என்று கூறுகிறார்கள். ஒரு வாக்குச்சாவடியில் 830 பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன.

இத்தனை பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளது என்றால் தேர்தல் ஆணையம் எத்தகைய பணியை செய்தார்கள் என்பது தெரியவில்லை. மலேசியா, மஸ்கட் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பலருக்கும் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் தலையீடு இருக்கிறதா? என்ற சந்தேகமும் எங்களுக்கு வருகிறது. இவற்றையெல்லாம் தாண்டி மக்கள் உற்சாகமாக வந்து வாக்கு செலுத்தியிருக்கிறார்கள்."இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

திமுக விஜய் DMK VIJAY அதிமுக சென்னை CHENNAI BJP பாஜக அண்ணாமலை TVK AMMK தவெக ANNAMALAI ADMK MK STALIN டிடிவி தினகரன் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN கனமழை உதயநிதி ஸ்டாலின் AIADMK மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் பாமக தமிழக வெற்றிக் கழகம் PMK முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் தமிழகம் UDHAYANIDHI STALIN CONGRESS ரஜினிகாந்த் கைது கோவை சட்டசபை தேர்தல் இந்திய அணி தமிழ்நாடு திருமாவளவன் INDIAN CRICKET TEAM COIMBATORE கொலை சீமான் பிரதமர் மோடி அமமுக வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH AJITH PARLIAMENT ELECTION தீபாவளி தென்காசி EDAPPADI PALANISWAMI NELLAI OPS ASSEMBLY ELECTIONS TAMIL ACTRESS நெல்லை தேவர் THIRUMAVALAVAN TAMILAGA VETTRI KAZHAGAM விடுமுறை SEEMAN கள்ளக்காதல் அஜித் ஓபிஎஸ் NORTHEAST MONSOON மதுரை தமிழக சட்டசபை தேர்தல் MADURAI வன்னியர் தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION PRIME MINISTER MODI CSK திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை