கடந்த சில ஆண்டுகளாக பலரும் தங்கள் வாகனங்களில் பிரஸ், போலீஸ், டாக்டர், வழக்கறிஞர், ஐகோர்ட்டு, தலைமை செயலகம், ஆர்மி என பல்வேறு ஸ்டிக்கர்களை ஒட்டி பயணிக்கிறார்கள். இப்படி பயணிப்பவர்களை பிடித்து ஆய்வு செய்தால் அதில் பலர் போலியாக ஒட்டியது தெரியவந்தது. மேலும் குற்றச்செயல்களை செய்துவிட்டு தப்பிக்க சில ரவுடிகள் மனித உரிமை, பிரஸ், ஊடகம், வழக்கறிஞர் என்று சுற்றுவதும் போலீசாரின் கவனத்திற்கு வந்தது.
இதையடுத்து போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கடந்த 27-ம்தேதி சுற்றறிக்கை ஒன்றைவெளியிட்டார். அதில், 'குற்றம்சாட்டப்பட்டவர்களும் வாகனத்தில் ஊடகம், காவல் துறை உள்பட பல்வேறு வகையான ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துவிடும்நிலை உள்ளது. எனவே தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது வரும் மே 2-ம் தேதி முதல் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தார்.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பும், ஆதரவும் சம அளவில் வந்தது. ஊடகம், டாக்டர், வழக்கறிஞர் என தங்கள் துறை தொடர்பாக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள போக்குவரத்து போலீசார் அனுமதி அளித்துள்ளனர். துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஊடகம், வழக்கறிஞர், டாக்டர் என ஸ்டிக்கர் ஓட்டினால் நடவடிக்கை பாயும். அதேபோன்று நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது என போக்குவரத்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்தநிலையில், சென்னையில் வாகன நம்பர் பிளேட்டுகளில், ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை அமலுக்கு வந்தது. வாகனங்களை கண்காணித்து, அபராதம் விதிக்கும் நடைமுறையை சென்னை காவல்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!