பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சேரன் தனது அடுத்த படத்திற்காக வேலைகளில் மும்முரமாக இருந்து வருகிறார். அதே வேளையில், தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக் உடன் ’ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த படத்தில் வீடு ஒன்று முக்கிய பாத்திரமாகவே இடம்பெற்றிருக்கிறது.
இந்த வீடு கட்டும் படப்பிடிப்பின்போது, வீட்டை சுற்றிப்பார்க்கும் காட்சியில் நடித்துள்ளார் சேரன். அப்போது கால் இடறி கீழே விழுந்த சேரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டி இருக்கிறது. இதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேரனின் தலையில் எட்டு தையல் போடப்பட்டு இருக்கின்றன.
இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது . அப்படி இருந்தும் மருத்துவமனையிலிருந்து தையல் போட்ட நிலையிலேயே வந்த நடித்துக் கொடுத்துவிட்டு படப்பிடிப்பை ரத்து செய்யாமல் தனது காட்சிகளை முடித்து கொடுத்திருக்கிறார் சேரன். இதனால் நெகிழ்ந்துபோயிருக்கிறது படக்குழு.
படப்பிடிப்பு முடிந்து விட்டதால் சேரன் உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது சென்னை திரும்பி இருக்கின்றனர்.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேரன் - தலையில் 8 தையல்கள்
தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?
யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!