திண்டுக்கல் - தேடல் முடிவுகள்

தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு

2024-04-19 15:40:29 - 2 weeks ago

தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின்


தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல்

2024-04-14 04:58:49 - 3 weeks ago

தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல் தேனி மக்களவைத் தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற டிடிவி தினகரன், இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தங்க தமிழ்ச்செல்வன், தவிர அதிமுகவில் புதுமுகமான நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில், அதிமுக என்னும் கட்சிதான். டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் அதிமுகவில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


நாயுடு சமுதாயத்தின் 12 சதவீத ஓட்டு பாஜகவிற்கு ஆதரவு!

2024-04-06 07:56:03 - 1 month ago

நாயுடு சமுதாயத்தின் 12 சதவீத ஓட்டு பாஜகவிற்கு ஆதரவு! வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில்,அ.தி.மு.க., வில் நான்கு பேரும், தி.மு.க., வில் இருவரும், காங்கிரஸ், தே.மு.தி.க., - -ம.தி.மு.க., வில் தலா ஒருநாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக இடம் பெற்றுள்ளனர். பா.ஜ., வில் நடிகை ராதிகா ஒருவரே இடம் பெற்றுள்ளார். அவர் சினிமா துறையை சார்ந்தவர். முழுநேர அரசியல்வாதிக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்ற அதிருப்தி


தேர்தலுக்குள் கச்சத்தீவை மீட்டு கொடுத்தால் எங்கள் வாக்கு பா.ஜ.க.வுக்கு- சீமான் பேச்சு

2024-04-02 04:52:36 - 1 month ago

தேர்தலுக்குள் கச்சத்தீவை மீட்டு கொடுத்தால் எங்கள் வாக்கு பா.ஜ.க.வுக்கு- சீமான் பேச்சு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேனி மாவட்டம் கம்பம், போடி, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி, பழனி ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் நடந்த பிரசார கூட்டத்தில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-பணம் இருப்பவர்கள்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. அரசியல் என்பது மக்களுக்காக உழைக்க மட்டுமே.


இரட்டை இலைக்காக மீண்டும் ஓ.பி.எஸ். தீவிர முயற்சி - தேர்தல் ஆணையத்தில் புதிய மனு

2024-03-23 11:25:29 - 1 month ago

இரட்டை இலைக்காக மீண்டும் ஓ.பி.எஸ். தீவிர முயற்சி - தேர்தல் ஆணையத்தில் புதிய மனு சென்னை:அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த


அதிமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை இடம் தெரியுமா.?

2024-03-20 00:47:24 - 1 month ago

அதிமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை இடம் தெரியுமா.? அதிமுக, தேமுதிக இடையே தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று தேமுதிக புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ, அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்தாக உள்ளது. அதிமுக கூட்டணியில் புதிய


பாராளுமன்ற தேர்தல் 15 அ.தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு!

2024-01-06 04:52:34 - 4 months ago

பாராளுமன்ற தேர்தல் 15 அ.தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு! பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பலமான கூட்டணியை அமைக்கும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். ஆனால் அவர் எதிர்பார்க்கும் வகையில் கட்சிகள் சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே கடைசி நேரத்தில் கூட்டணிக்கு ஏதாவது கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்ளலாம். தொகுதி பங்கீடு பற்றியும் அப்போது பார்த்து கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு


நாடு முழுவதும் கூடுதலாக 34 நகரங்களில் 5ஜி சேவை... ஜியோ நிறுவனம் அறிவிப்பு

2023-03-15 15:53:56 - 1 year ago

நாடு முழுவதும் கூடுதலாக 34 நகரங்களில் 5ஜி சேவை... ஜியோ நிறுவனம் அறிவிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜியோ இந்தியாவில் இணையப் புரட்சியை ஏற்படுத்திவருகிறது. தரமான 4 ஜி இணைய சேவையை வழங்கியதன் மூலம் இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக ஜியோ உருவெடுத்தது. தற்போது, ஜியோ நிறுவனம் அதன் பயனாளர்களுக்கு 5 ஜி சேவையை வழங்கிவருகிறது. இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஜியோ 5 சேவை வழங்கும் எல்லையை அதிகப்படுத்திவருகிறது.


நெல்லை உள்பட 27 நகரங்களில் ஜியோ 5 ஜி சேவை இன்று முதல் தொடக்கம்!

2023-02-28 16:20:51 - 1 year ago

நெல்லை உள்பட 27 நகரங்களில் ஜியோ 5 ஜி சேவை இன்று முதல் தொடக்கம்! ஜியோவின் அதிவேக சேவையான 5ஜி சேவையைத் தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்தியா முழுவதும் 304 நகரங்களில் ஜியோவின் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இன்று ஜியோவின் அதிவேக 5ஜி சேவை 25 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் மாவட்டத்தில் இன்று முதல் முதல் முறையாக 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் தொடங்கியுள்ளது.


தமிழை தேடி பிரசார பயணத்தை தொடங்கினார் ராமதாஸ்

2023-02-21 11:17:17 - 1 year ago

தமிழை தேடி பிரசார பயணத்தை தொடங்கினார் ராமதாஸ் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 'தமிழை தேடி' என்ற பெயரில் பிரசார பயணத்தை தொடங்கப் போவதாக அறிவித்து இருந்தார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிவிப்பில் தமிழகத்தில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதுதான் ஒரு காலத்தில் முழக்கமாக இருந்தது. ஆனால் இன்று பள்ளிகள், பெயர் பலகைகள், உயர்நீதிமன்றத்தில் தமிழ் இல்லை. எனவே அழிவின் விளிம்பில் இருந்து