வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில்,அ.தி.மு.க., வில் நான்கு பேரும், தி.மு.க., வில் இருவரும், காங்கிரஸ், தே.மு.தி.க., - -ம.தி.மு.க., வில் தலா ஒருநாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக இடம் பெற்றுள்ளனர்.
பா.ஜ., வில் நடிகை ராதிகா ஒருவரே இடம் பெற்றுள்ளார். அவர் சினிமா துறையை சார்ந்தவர். முழுநேர அரசியல்வாதிக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்ற அதிருப்தி பா.ஜ.,வில் நீடிக்கிறது.
துாத்துக்குடியில் போட்டியிட விரும்பிய நாயுடு சமுதாயத்தை சேர்ந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன், விவேகம் ரமேஷ் ஆகியோரும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., கோபால்சாமி, பாண்டுரங்கனையும் வேட்பாளராக்கவில்லை என்ற அதிருப்தி நீடிக்கிறது.
இந்நிலையில், பா.ஜ.,வுக்கு ஆதரவளிக்க நாயுடு சமுதாய சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.
இதுகுறித்து, நாயுடு சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது:
தமிழகத்தில் எங்கள் சமூகத்திற்கு 12 சதவீத ஓட்டுகள் உள்ளன. தென்காசி, துாத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மேற்கு, வட மாவட்டங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக நாங்கள் உள்ளோம்.
இருப்பினும், சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் எங்கள் சமுதாயத்தினருக்கு தேசிய, மாநில கட்சிகள் முன்னுரிமை தருவதில்லை.
அ.தி.மு.க.,வில் ஜெயலலிதா தலைமைக்கு முன், எம்.ஜி.ஆர்., தலைமையிலான ஆட்சியில் 60 எம்.எல்.ஏ.,க்கள் வரை இருந்தனர். ஜெயலலிதா காலத்தில், முக்குலத்தோர் சமுதாயத்திற்கும், கவுண்டர் சமுதாயத்திற்கும் அ.தி.மு.க., முக்கியத்துவம் கொடுத்தது.
தி.மு.க.,வும், அதே பார்முலாவை பின்பற்றியது. இதனால், நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள் தலைவராக இருக்கும், ம.தி.மு.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தோம். இனி அந்த கட்சிகளை ஆதரித்தும் பயனில்லை.
எனவே, இந்த தேர்தலில் பா.ஜ., வுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளோம். அதேநேரம், மற்ற கட்சிகளில் போட்டியிடும் எங்கள் நாயுடு சமுதாய வேட்பாளர்களுக்கு ஓட்டு போட முடிவெடுத்து உள்ளோம்.
இதற்கு நாயுடு சங்கம், பேரவை, நாயுடு மகாஜன சங்கம் என, 14க்கும் மேற்பட்ட அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?
உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு பூ உண்டு அது என்ன?
பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?
நடிகை செளந்தர்யா விபத்தின் காரணமாக உயிரிழக்கவில்லை என்றும் அவரது மரணத்தில் மூத்த தெலுங்கு நடிகர் மோகன்பாபுவுக்கு தொடர்பிருப்பதாகவும் தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 1990களில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் முன்னணி நட்சத்திர நடிகையாக கொடிகட்டிப் பறந்தார் செளந்தர்யா. 2004 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பிரசாரத்துக்காக
சென்னை: சேலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:- நாளை (இன்று) காலை 6 மணி வரை ஒட்டு மொத்த தி.மு.க. மற்றும் தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி 'கெட் அவுட் மோடி' என்று டுவீட் போடுங்கள். நானும் 'கெட் அவுட் ஸ்டாலின்' என்று டுவீட் போடுகிறேன். யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்து அகற்றப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஒரு குடும்பத்தின் மேலாதிக்கத்திற்காக, கறைபடிந்த அமைச்சரவையை கொண்டுள்ள, ஊழலின் மையமாக திகழ்தல், சட்டம் - ஒழுங்கை கண்டுகொள்ளாமல் இருத்தல், தமிழ்நாட்டை போதைப்பொருள் மற்றும்
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!