திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள கே.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் சிவகுமார் (வயது 33). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது தம்பி தேவேந்திரன் (30). நேற்று மதியம் தனது வீட்டின் அருகே சிவகுமார் மது அருந்திக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென தம்பி தேவேந்திரன் நண்பர்களுடன் சேர்ந்து பட்டா கத்தியால் சிவகுமாரை வெட்ட முயன்றார். உடனே சிவகுமார் அங்கிருந்து தப்பி பக்கத்தில் உள்ள வயல்வெளியில் ஓடினார். ஆனாலும் விடாமல் தேவேந்திரன் தனது நண்பர்களுடன் சிவகுமாரை ஓட ஓட துரத்தி சென்று பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டினார்.வெட்டுகாயம் அடைந்த சிவகுமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தகவல் அறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவகுமார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே அண்ணனை படுகொலை செய்த தப்பி தேவேந்திரன் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தேவேந்திரனிடம் விசாரணை நடத்தினர். அதில், எனது மாமியாருக்கும் அண்ணன் சிவகுமாருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை பலமுறை கண்டித்தும் சிவகுமார் கள்ளக்காதலை விடவில்லை. தொடர்ந்து எனது மாமியாருடன் தகாத உறவில் இருந்து வந்ததால் ஆத்திரத்தில் அண்ணனை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். தேவேந்திரனை கைது செய்த போலீசார் அவருடன் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அவரது கூட்டாளிகனை தேடி வருகின்றனர். தம்பியின் மாமியாருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் அண்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு பூ உண்டு அது என்ன?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!