பரிசீலனை - தேடல் முடிவுகள்

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை - சுப்ரீம் கோர்ட்டு

2024-05-03 11:45:56 - 6 days ago

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை - சுப்ரீம் கோர்ட்டு டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து


நடிகை ஹேமமாலினி மதுரா தொகுதியில் வேட்புமனு தாக்கல்

2024-04-04 10:41:01 - 1 month ago

நடிகை ஹேமமாலினி மதுரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் பாலிவுட்டில் "கனவுக்கன்னி" என்று அழைக்கப்பட்ட நடிகை ஹேமமாலினி, கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் இறங்கினார். அந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். மீண்டும் 2019-ம் ஆண்டு தேர்தலிலும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது, தொடர்ந்து 3-வது முறையாக மதுரா தொகுதியில்


தமிழகத்தில் வேட்பு மனு பரிசீலனை - 569 மனுக்கள் நிராகரிப்பு

2024-03-29 09:02:21 - 1 month ago

தமிழகத்தில் வேட்பு மனு பரிசீலனை - 569 மனுக்கள் நிராகரிப்பு தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து நேற்றைய தினம் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் 238 பெண் வேட்பாளர்கள் உள்பட


அண்ணாமலை வேட்புமனு சர்ச்சை - தேர்தல் அதிகாரி விளக்கம்

2024-03-28 14:15:32 - 1 month ago

அண்ணாமலை வேட்புமனு சர்ச்சை - தேர்தல் அதிகாரி விளக்கம் கோவை,தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கடந்த 20-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நேற்று நிறைவடைந்தது. வேட்புமனுக்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று பரிசீலனை


நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு

2024-03-28 03:13:53 - 1 month ago

நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ``தற்போதுள்ள காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி ஆகிய தலைவர்கள் களத்தில் வெற்றி பெற்றால்தான், அ.தி.மு.க காப்பாற்றப்படும் என்பதால், இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.


குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை - தமிழக அரசு அறிவிப்பு!

2023-12-09 15:26:30 - 5 months ago

குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை - தமிழக அரசு அறிவிப்பு! மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையில் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. இதில் இன்னும் சில பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. எனினும், பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது.


அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மீண்டும் விசாரணை தொடக்கம்..!

2023-08-08 03:17:24 - 9 months ago

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மீண்டும் விசாரணை தொடக்கம்..! சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அமலாக்கத்துறை கைது செய்தது சட்ட விரோதம் என செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தலாம் எனவும் தெரிவித்தது. இதையடுத்து, செந்தில்


மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டப்படுமா? அண்ணாமலை பதில்

2021-10-30 07:51:34 - 2 years ago

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டப்படுமா? அண்ணாமலை பதில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட மத்திய அரசிடம் கொண்டு சென்று பரிசீலனை செய்யப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.