தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ``தற்போதுள்ள காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி ஆகிய தலைவர்கள் களத்தில் வெற்றி பெற்றால்தான், அ.தி.மு.க காப்பாற்றப்படும் என்பதால், இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.
வாய்ப்பு இருந்தால் அடுத்து வரும் தோதலில் போட்டியிடுவேன். மேலும் டி.டி.வி.தினகரன் பல்வேறு உதவிகளை இங்கு செய்துள்ளவர், அனைவருக்கும் பரிச்சயமானவர். நானும் அவரும் வேறு வேறு இல்லை.
ராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ், தேனியில் டி.டி.வி.தினகரன் ஆகியோர் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். `ஓ.பி.எஸ்., தாத்தா...' என குழந்தைகள்கூட அன்போடு அழைக்கும் முகத்திற்குச் சொந்தக்காரர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பழுத்த அரசியல் அனுபவம் பெற்றவர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பினர்தான் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காவே, ராமநாதபுரத்தில் அவர் பெயரிலேயே பல வேட்பாளர்களை போட்டியிட மனு செய்ய வைத்துள்ளனர். அந்த குழப்பத்திற்கு வேட்பு மனு பரிசீலனையிலேயே உண்மை நிலை தெரிந்துவிடும். எடப்பாடி பழனிசாமி சுயநலத்தால் கட்சியை அபகரித்துக் கொண்டார். மேலும், நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு அவரால்தான் பறிபோனது. போடி தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால், நான் போட்டியிட வாய்ப்பு உள்ளது" என்றார்.
இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?
ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?
ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி உள்பட 2 பேர் பலி
பொது வேலைநிறுத்தம் : கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை
பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து- தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்
2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!