POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

தமிழகத்தில் வேட்பு மனு பரிசீலனை - 569 மனுக்கள் நிராகரிப்பு

2 years ago 29 மார்ச் 2024 09:02 AM | views : 206
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெற்றது.

தொடர்ந்து நேற்றைய தினம் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் 238 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,741 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் இதுவரை 933 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், 569 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட உள்ளது. சில இடங்களில் பிரபலமான வேட்பாளர்களின் வேட்பு மனுக்களில் தவறுகள் இருந்ததாக சுட்டிக் காட்டப்பட்டு, அந்த தவறுகள் திருத்தப்பட்ட பின்னர் மனுக்கள் ஏற்கப்பட்டன. ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதாரணி, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்த நிலையில், அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 22 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதில் 13 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை வரை அவகாசம் உள்ள நிலையில், நாளை மாலைக்குள் தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK பாஜக BJP ADMK AMMK ANNAMALAI தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் கனமழை மு.க.ஸ்டாலின் TAMIL NADU AIADMK TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் உதயநிதி ஸ்டாலின் PMK பாமக காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் CONGRESS திருமாவளவன் தமிழகம் சட்டசபை தேர்தல் கைது கோவை இந்திய அணி ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN COIMBATORE INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை தேவர் கொலை PARLIAMENT ELECTION வன்னியர் KEERTHY SURESH அமமுக AJITH THIRUMAVALAVAN தென்காசி தீபாவளி TAMIL ACTRESS SURIYA OPS சீமான் NELLAI நெல்லை ஓபிஎஸ் ASSEMBLY ELECTIONS தமிழ்நாடு NORTHEAST MONSOON அன்புமணி திருப்பரங்குன்றம் PRIME MINISTER MODI மதுரை கொரோனா தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் தமிழக சட்டசபை தேர்தல் CSK TAMILAGA VETTRI KAZHAGAM பாலியல் தொல்லை ELECTION COMMISSION BIGG BOSS TAMIL அஜித் விடுமுறை கள்ளக்காதல் சூர்யா