எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?


சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?


இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?


வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?


இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?


வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?


கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?


டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.


காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை அவன் யார்?


ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் நடப்பான் ஒருவன் ஓடுவான் அது என்ன?


முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?


வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?


இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?


கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?


இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?


பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?


எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?  Home  
WhatsApp Share SHARE IN WHATSAPP WhatsApp Share