சிறப்புச் செய்தி
சென்னையில் ஓடும் அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து
சென்னை அடையாறில் ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.பிராட்வே முதல் கேளம்பாக்கம் சிறுசேரி வரை செல்லும் 109 சி அரசு பேருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.முதற்கட்ட தகவலாக சாலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்தில் இருந்து புகை வந்ததையடுத்து அதில் பயணித்து கொண்டிருந்தவர்கள் பேருந்தை விட்டு இறங்கி இருக்கின்றனர். சற்று நிமிடங்களில் அரசு பேருந்தானது எரிய தொடங்கி உள்ளது.இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். புகை ஏற்பட்டதையடுத்து பயணிகள் வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.அரசு பேருந்து தீ விபத்து குறித்த காரணம் இதுவரை தெரியவில்லை.
Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்!
முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்
தொடர்புடைய செய்திகள்
அறிவிக்கப்படாத அவசரநிலை போல் உள்ளது.. மக்கள் உரிமைகளுக்கு எதிராக போ...
9 hours ago
தமிழகத்திற்கு ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொட...
10 hours ago
நடுவானில் தீ விபத்து ,அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்
10 hours ago