தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கியது.

கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் தனது இலக்கு என அறிவித்த விஜய், சமீபத்தில் தனது கட்சிக் கொடியையும், பாடலையும் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து கட்சியின் முதல் மாநாட்டிற்கான வேலைபாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.


ஆனால் மாநாடு நடத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கு முன்னதாக, மாநாடு ஏற்பாடுகள் குறித்து 21 கேள்விகளை காவல்துறை தவெக கட்சியினர் முன்வைத்தனர். இந்த கேள்விகளுக்கு நேற்று முன்தினம் (செப். 6) விஜய் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.


இந்நிலையில் காவல்துறை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு ஏற்கனவே அறிவித்த செப். 23-ம் தேதியில் மாற்றம் இன்றி நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தவெக மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதனை இன்று (செப். 8) காலை 11 மணிக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டு உறுதி செய்வார் என கூறப்படுகிறது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel