தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

மதுரை: சிறுமி வேலை பார்த்த கடைக்குள் புகுந்து அவருக்கு தாலி கட்டிய வாலிபர்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள பேன்சி கடை ஒன்றில் 17 வயது சிறுமி வேலை செய்து வந்த நிலையில், வாலிபர் ஒருவர் திடீரென கடைக்குள் புகுந்துள்ளார். அவர் நேராக சென்று, பையில் மறைத்து வைத்திருந்த தாலியை எடுத்து சிறுமியின் கழுத்தில் கட்டியுள்ளார். அப்போது, கடையில் இருந்தவர்கள் வெளியே சென்று விட்டனர் என கூறப்படுகிறது.


ஒரேயொருவர் மட்டும் கடையில் இருந்துள்ளார். அவர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். அவர்கள் போலீசிடம் தெரிவித்து உள்ளனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சிங்கப்பெண் அதிரடிப்படை விரைந்து சென்றது. இதனை தெரிந்து கொண்டதும் அந்த வாலிபர் கடையில் இருந்து தப்பியோடி விட்டார்.


சிங்கப்பெண் அதிரடிப்படைஇதுபற்றி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போலீசார் விசாரணை செய்தனர். பின்னர், வீட்டில் பதுங்கி இருந்த வாலிபரை போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் அந்த சிறுமியை மீட்டு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார். போலீசாரின் விசாரணையில் வாலிபர் மதுபோதையில் இருந்துள்ளார் என கூறப்படுகிறது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel