பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை!

நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.

இதனால்தான், கடந்த காலங்களில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் உறுதியாக அதனை நிராகரித்தது தி.மு.க.!

கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக் கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, விவசாயச் சங்கத்தினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்!

பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகம் செல்லும் முடிவை முதலமைச்சர் விஜய் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel