தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

"புரட்சி தாய்.." சசிகலாவுக்கு சூட்டப்பட்ட புது பெயர்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, புரட்சித்தலைவி என்று தொண்டர்கள் அழைப்பது வழக்கம். அந்த வரிசையில் அவருடைய தோழி சசிகலாவுக்கு புரட்சித் தாய் சின்னம்மா என்ற பட்டப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு இன்று சசிகலா சென்று அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அவர் சென்னை தி நகர் இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரைக்கு காரில் அதிமுக கொடியுடன் பயணம் செய்தார். பசுமை பட்டாசுகளை வெடிக்க ராஜஸ்தான் மாநில அரசு அனுமதி - முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு நேரலை ஒளிபரப்பு அவர் வீட்டிலிருந்து கிளம்பி மெரினா கடற்கரை செல்லும் சுமார் 45 நிமிடங்களும் தொலைக்காட்சி அதை நேரலை ஒளிபரப்பு செய்தது. அவர் செல்லக்கூடிய வழிநெடுகிலும் அதிமுக கொடியுடன் தொண்டர்கள் நிற்பதையும் வாழ்க கோஷங்கள் எழுப்பியும் தொலைக்காட்சியில் காட்டியது.

இதுவரை, சசிகலாவை, தியாக தலைவி என்றும், சின்னம்மா என்றும் மட்டுமே அவர் சார்ந்த தொலைக்காட்சி சேனல் குறிப்பிடுவது வழக்கம். அதேபோலதான், நமது எம்ஜிஆர் நாளிதழ் குறிப்பிடுவது வழக்கம். ஆனால் இன்று புரட்சித் தாய் சின்னம்மா என்று சசிகலா பற்றி அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
குறிச்சொற்கள்: சசிகலா SASIKALA AMMK JAYALALITHA
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel