தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

‘பரந்தூர் விவகாரத்தில் திமுக வெளிப்படைத் தன்மையுடன் இல்லை’ - பெ.சண்முகம்

சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத் திட்டமான பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் நேற்று சட்டமன்றத்தில் தெரிவித்தார். பரந்தூருக்குப் பதிலாக மாற்று இடம் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தவெக அரசின் இந்த முடிவிற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். குறிப்பாக திமுக தலைவர்கள் பலர் நேற்று இந்த விவகாரம் குறித்து பல பின்னடைவுகளை குறிப்பிட்டு விளக்கிப் பேசியிருந்தனர்.

ஆனால் விமான நிலையம் அமையப்போகிறது என அப்பகுதியில் திமுக தலைவர்கள் பலர் இடம் வாங்கிப்போட்டுவிட்டதால் இந்த அக்கறை என தவெக விமர்சித்தது.

இந்நிலையில் பரந்தூர் விவகாரத்தில் திமுக வெளிப்படைத் தன்மையுடன் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்.,

“எங்களைப் போன்றவர்கள் பலமுறை வற்புறுத்தியதற்கு பிறகும் ‌பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய மச்சேந்திர நாதன் ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை திமுக ஆட்சிக்காலம் முழுவதும் வெளியிடாமல் மூடி மறைத்தது ஏன்?

இந்த விஷயத்தில் திமுக வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை. அந்த அறிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை வெளியிடத் தயாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel