தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

டெங்கு காய்ச்சல் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம்- அமைச்சர் விளக்கம்

தமிழ்நாடு சட்டசபை இன்று தொடங்கியதும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன்பின், நேபாள வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்தார்.

அதனை தொடர்ந்து, தி.மு.க. எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம், டெங்கு காய்ச்சல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இத்தீர்மானத்தின் மீது முதலில் பேசிய எடப்பாடி பழனிசாமி, டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் பரவும் நிலையில் கட்டுப்பாடு நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழகம் முழுவதும் இன்றைக்கு டெங்கு, மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெருமளவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே டெங்கு, மலேரியா ஆகியவற்றை கட்டுப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்பதை அறிய விரும்புகிறேன் என்றார்.

டெங்கு, மலேரியா காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த அவையின் மூலமாக அறிய விரும்புவதாக தெரிவித்தார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் என்றும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. முந்தைய ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக காய்ச்சல் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டதை புள்ளி விவரங்கள் மூலம் நாம் அறியலாம். பருவமழை தொடங்க உள்ளதால் தமிழக அரசு உடனடியாக மருத்துவ முகாம்களை அமைத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை, சுகாதார நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. வீடு வீடாக கண்காணிப்பு. கொசு ஒழிப்பு பணியும் மேற்கொள்ளப்படுகிறது. டெங்கு காய்ச்சல் தொடர்பாக 2 நாட்களுக்கு முன்னர் அனைத்து இயக்குநர், மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel