முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை
திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க சுமார் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக புகார் இவர் மீது எழுந்தது. இது தொடர்பான புகாரில் திமுக நிர்வாகி அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டசபையில் அமைச்சர் மரிய வில்சனும், அன்பில் மகேஷ் மீது லஞ்சப் புகார் கூறியிருந்தார்.
இந்நிலையில், திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அன்பில் மகேஷின் திருச்சி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் ரூ.100 கோடி முறைகேட்டில் கைதான அரசகுமாருடன் தொடர்பு என்ற புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, தமிழகம் முழுவதும் பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அரசகுமார் கைது செய்யப்பட்டார்.
அரசகுமார் கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறையில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளை தனக்கு தெரியும் என்று கூறி தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ. 100 கோடிக்கு மேல் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் பள்ளிகளை சேர்ந்த நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திமுக பிரமுகரான பி.டி. அரசகுமாரை கைது செய்தனர்.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி. மற்றும் சி.எம்.டி.ஏ. அங்கீகாரம் உள்ளிட்ட பிற சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி, தமிழகம் முழுவதும் பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து ரூ.100 கோடிக்குமேல் வசூலித்து மோசடி செய்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அரசகுமார் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.
இந்த மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதன் அடிப்படையில் பி.டி. அரசகுமார் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோருக்கும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளதா என்பது பற்றிய விசாரணை நடத்தப்பட்டது.
இதன் முடிவில் ரூ.100 கோடி மோசடி வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel