தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படவில்லை- ஐகோர்ட்டில் முதலமைச்சர் தரப்பு விளக்கம்

குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறு என ஐகோர்ட்டில் முதல்வர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தேர்தல் வழக்கில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்தியதற்காக எனது வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

தேர்தல் செலவு கணக்கு, வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற்றதை மறைத்ததாக கூறும் புகார்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

வழிபாட்டு தலங்களில் பிரச்சாரம் செய்ததாகக்கூறிய குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரங்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel