தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

கோவில்களில் இன்று முதல் செல்போன்களுக்குத் தடை!

ஏற்கனவே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் செல்போன்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள 52 பெரிய கோவில்களில் செல்போன் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று காலையில் செல்போன் பாதுகாப்பு மையத்தில் செல்போன்களை வைக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

அவர்கள் செல்போன்களை கொடுத்து ரூ.5 கட்டணம் செலுத்தி ரசீது பெற்று சென்றனர்.

இதேபோல் சென்னை வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், வல்லக்கோட்டை முருகன் கோவில், காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், திருவள்ளூர் வீர ராகவர் கோவில், திருத்தணி முருகன் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பு பெட்டகத்தில் கொடுத்து விட்டு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

பழனி முருகன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், நெல்லையப்பர் கோவில், சுசீந்திரம் தாணு மாலய சுவாமி கோவில், மதுரை அழகர் கோவில், கோவை கோணியம்மன் கோவில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் உள்ளிட்ட பெரிய கோவில்களிலும் செல் போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்ட தால் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு பெட்டகத்தில் பக்தர்கள் செல்போன்களை கொடுத்து விட்டு கோவிலுக்குள் சென்றனர்.

உள்ளூர் பக்தர்கள் வீடுகளிலும், வெளியூர் பக்தர்கள் தாங்கள் சென்ற வாகனத்திலும் செல்போன்களை வைத்து விட்டு சென்றதை காணமுடிந்தது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel