ஆண்டு விழாவை ஒட்டி வருடாந்தர சலுகையை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஸ்பெஷல் எடிஷன் வருடாந்திர பிரீபெயிட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஜியோவின் 10-ஆவது ஆண்டு விழாவை ஒட்டி இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
செப்டம்பர் 2016-இல் வர்த்தக ரீதியில் பணிகளை தொடங்கிய ரிலையன்ஸ் ஜியோ தற்போது அறிவித்து இருக்கும் பிரீபெயிட் ரீசார்ஜ் திட்டத்தில் கிளவுட் ஸ்டோரேஜ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த சந்தாக்கள் மற்றும் டிஜிட்டல் பார்ட்னர் வவுச்சர் உள்ளிட்டவைகளை வழங்குகிறது.
தினமும் 2.5 ஜிபி அதிவேக 4ஜி டேட்டா
அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா
அன்லிமிட்டெட் அழைப்புகள்
தினமும் 100 எஸ்.எம்.எஸ்.
12 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 10 ஜிபி டேட்டா வீதம் 120 ஜிபி டேட்டா போனஸ்
கூகுள் ஜெமினி ப்ரோ சேவைக்கான 18 மாத சந்தா
5000 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ்
நானோ பனானா ஏ.ஐ.
ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா
ஒரு வருடத்திற்கு ஜியோ டிவி ப்ரோ சந்தா
EasemyTrip வழங்கும் விமானங்கள் மற்றும் ஓட்டல் புக்கிங்களில் ரூ. 2200 வவுச்சர்
ரூ. 200 AJIO தள்ளுபடி வவுச்சர்
Cinepolis திரையரங்குகளில் ரூ. 150 தள்ளுபடி வவுச்சர்
ரிலையன்ஸ் ஜியோவின் வருடாந்திர சிறப்பு சலுகை அனைத்து டிஜிட்டல் தளங்கள், மைஜியோ செயலி, ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு சில்லறை நெட்வொர்க்குகளில் கிடைக்கிறது.
முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவை தொடர்ந்து சர்வதேச சந்தையிலும் தனது சேவையை விரிவுப்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது.
இது குறித்து ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி வெளியிட்ட அறிக்கையில், "இன்று ஜியோ ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தை விடவும் மேலானதாக திகழ்கிறது. இணைப்பு வசதி, டிஜிட்டல் தயாரிப்புகள், நிறுவனங்களுக்கான தீர்வுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகளில், இந்தியாவிலேயே சொந்தத் தொழில்நுட்பங்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.
தொழில்நுட்பத்தின் பலன்களை பெருமளவில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது, இத்தொழில்நுட்பங்களை உலகளாவிய நிலைக்குக் கொண்டு செல்வது மற்றும் உலகிற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கும் நாடாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவது ஆகியவையே நம் முன்னால் உள்ள வாய்ப்புகளாகும்," என்று கூறினார்.

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel