சிறப்புச் செய்தி

ICC செப்டம்பர் மாத சிறந்த வீரர் விருது வென்றார் சுப்மன் கில்

13 hours ago 12 பார்வைகள்
ICC செப்டம்பர் மாத சிறந்த வீரர் விருது வென்றார் சுப்மன் கில்

அதன்படி, ஐசிசியின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய வீரர்கள் சுப்மன் கில், அபிஷேக் சர்மா மற்றும் ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ராசாவும் இடம் பிடித்துள்ளனர்.

இதனால், செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசி விருதில் இந்தியாவின் இரண்டு முன்னணி பேட்டர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில் செப்டம்பர் 2026 மாதத்திற்கான ஐசிசி சிறந்த சர்வதேச வீரர் விருதை வென்றுள்ளார். இதனை ஐசிசிஅதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் ஐசிசி மாதத்தின் சிறந்த வீரர் விருதை ஐந்தாவது முறையாக வென்றுள்ளார்.

செப்டம்பர் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சுப்மன் கில் அபாரமாக விளையாடினார். முதல் ஒருநாள் போட்டியில் 108 பந்துகளில் 110 ரன் எடுத்த அவர், இரண்டாவது போட்டியில் 133 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 223 ரன்கள் குவித்தார். இதில் 26 பவுண்டரிகளும் 8 சிக்சர்களும் அடங்கும்.

406 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்திய அணி வெற்றிகரமாகத் துரத்தி சாதனை படைக்க கில்லின் இரட்டைச் சதம் முக்கியக் காரணமாக அமைந்தது. இந்த இரண்டு போட்டிகளில் மட்டும் அவர் மொத்தம் 333 ரன்கள் எடுத்தார்.

சதம் மற்றும் இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்த சுப்மன் கில் விருதைத் தட்டிச் சென்றார்.

ஆண்கள் பிரிவில் அதிக முறை இந்த விருதைப் பெற்ற வீரர் என்ற தனது சாதனையை கில் நீட்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பெண்கள் பிரிவில் இந்தியாவின் ஷபாலி வர்மா சிறந்த வீராங்கனைக்கான விருது வென்றுள்ளார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்